அரசு வேலையில் இப்படி சேர்ந்தது இத்தனை பேரா.. டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோரை அசரவைத்த கன்னியாகுமரி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 1.4.2023 முதல் 31.3.2024 வரை நடத்தப்பட்ட போட்டி தேர்வுகள் மற்றும் பயிற்சி வகுப்புகள், அதில் பங்கேற்றவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன. இங்கு பயிற்சி தேர்வுகளில் பங்கேற்ற 82 பேருக்கு அரசு பணிகள் கிடைத்துள்ளது என மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஜெரிபா இம்மானுவேல் கூறினார்.
வேலைவாய்ப்பின்மை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக இந்தியாவில் இருக்கிறது. வேலை தேடி பலர் மாநிலம் விட்டு மாநிலம் செல்கிறார்கள். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்கிறார்கள். வெறும் 120000 சம்பளத்திற்காக 2000, 2500 கிமீ தூரம் தள்ளியிருந்து கோவைக்கும், சென்னைக்கும் பலர் வேலை தேடிவருபவர்கள் அதிகம். தமிழ்நாட்டிலுமே கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, தஞ்சை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் போதிய வேலைகிடைக்காத காரணத்தால் சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூர் உள்பட பல்வேறு ஊர்களுக்கு செல்கிறார்கள்.

அரசு வேலையை பொறுத்தவரை மிகவும் குறைவான நபர்களுக்கே கிடைக்கும். அதற்கே கடும் போட்டி இருக்கும்.. தற்போதைய நிலையில் அரசுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் தனியார் வேலையைவிட அரசு வேலையில் சேருவதற்கு படித்த இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். வேலை கிடைக்காதவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் வரை ஓராண்டில் 2,853 பேருக்கு அரசால் ரூ.1 கோடியே 41 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 1.4.2023 முதல் 31.3.2024 வரை நடத்தப்பட்ட போட்டி தேர்வுகள் மற்றும் பயிற்சி வகுப்புகள், அதில் பங்கேற்றவர்களின் விவரங்கள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஜெரிபா இம்மானுவேல் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறும் போது, "நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த ஓராண்டில் குரூப்- 1, 2, 4 மற்றும் டெட் தேர்வு, வங்கி தேர்வு, ரயில்வே, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு மற்றும் மத்திய அரசின் தேர்வுகள் என மொத்தம் 76 மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்ட அரசு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் மொத்தம் 456 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மாநில மற்றும் மத்திய அரசின் தேர்வுகளான குரூப்-1 தேர்வில் 4 பேரும், குரூப்-4 தேர்வில் 20 பேரும், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 10 பேர், குரூப்-2 (மெயின்) தேர்வில் 20 பேர் உள்பட 82 பேர் அரசு தேர்வுகளில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்துள்ளார்கள்" இவ்வாறு அவர் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications