கோவையில் மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கு சூப்பர் சான்ஸ்..இன்ஜினியரிங், ஐடி துறையில் பணியாற்ற வாய்ப்பு
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு முதல் எந்த படிப்பு படித்திருந்தாலும் உற்பத்தித் துறை, ஜவுளித் துறை, ஐடி துறை, இன்ஜினியரிங் துறையில் வேலைவாய்ப்பு அள்ளித் தரப்படவுள்ளது. வாங்க அதுகுறித்து தெரிந்து கொள்ளலாம்...
படித்தவர்களாக இருந்தாலும், படிக்காதவர்களாக இருந்தாலும் ஒரு நல்ல அலுவலகத்தில் சேர்ந்து சம்பாதித்து முன்னேற வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு இளைஞர்களின் கனவாகவும் இருக்கும். சரியான முயற்சி மற்றும் திட்டமிட்டால் கண்டிப்பாக நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும்.

அந்த வகையில், கோவையில் மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் அரசு சார்பில் பல்வேறு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் எட்டாம் வகுப்பு முதல் எந்த படிப்பு வரை படித்திருந்தாலும் அனைத்து துறைகளிலும் பல்வேறு முன்னணி வேலை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
வேலைவாய்ப்பற்ற மாற்றுத் திறனாளி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் கோயம்புத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையங்கள், மாற்றுத் திறனாளி நலஅலுவலகத்துடன் இணைந்து மண்டல அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புத் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பர் 28 ஆம் தேதியன்று கோவை, சித்தாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 8 மணியளவில் நடத்தப்பட உள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், கோயம்புத்துார் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து உற்பத்தி துறை, ஜவுளித் துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி. துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத் துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கான பணி காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.
எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு, பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு, தொழில் கல்வி பயின்றவர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்துப் பிரிவினரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்துகொள்ள வயது வரம்பு எதுவும் இல்லை. மேலும், அனுமதி முற்றிலும் இலவசம்.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு பதிவு செய்து முகாமிற்கு விண்ணப்பித்தல் வேண்டும். மேலும், விவரங்களுக்கு வேலையளிப்போர் (Employer) 78456 64918, 63815 90373 எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் அனைத்து மாற்றுத் திறனாளி வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களது சுயவிவரம் (Bio-data) மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணி நியமன ஆணை உடனுக்குடன் வழங்கப்படும். இம்முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு மனுதாரர்கள் 0422-2642388, 9499055937 என்ற தொலைபேசி எண்களில் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை தொடர்பு கொள்ளவும்.
இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் மனுதாரர்கள் அதிக அளவில் மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயனடைலாம் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
-
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications