சவுதி அரேபியா அமைச்சகத்தில் வேலை.. தமிழ்நாட்டு ஆண், பெண்களுக்கு அரிய வாய்ப்பு.. முழு விவரம்
காஞ்சிபுரம்: சவுதி அரேபியா அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர்கள் மற்றும் ஆண் / பெண் Perfusionists - க்கு ஓர் அரிய வாய்ப்பு, விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
சவுதி அரேபியா அமைச்சகத்தில் பணிபுரிய ஆண்/பெண் Perfusionistsக்கு அரிய வாய்ப்பு தற்போது வந்துள்ளதாக இந்நிறுவனத்தின் இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனையில் பணிபுரிவதற்கு குறைந்த பட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.
மேலும் data flow மற்றும் hrd சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும் மற்றும் சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் Perfusionists - தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட ஆண்/பெண் Perfusionists தேவைப்படுகிறார்கள்.
மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலை அளிப்பவரால வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மூலம் அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைக்கான பணிகாலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைதளமான https://www.omcmanpower.com/ என்ற வலைதளத்தில் கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் ( 9566239685, 6379179200, 044-22505886 / 044-22502267) வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேல்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள [email protected] என் மெயில் ஐடிக்கு உங்கள் பயோடேட்டா மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை இணைத்து அனுப்புங்கள்.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரடியாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பதிவு மற்றும் பணி விவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும்.

இந்தப் பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிடம் இருந்து சேவைக் கட்டணமாக ரூ.35400 மட்டும் வசூலிக்கப்படும் என்தை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவத்தின் நிர்வாக இயக்குனர் அவர்களின் செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளார் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் ஐஏஏஸ் தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications