குரூப் 4 தேர்வர்களுக்கு அற்புதமான வாய்ப்பு.. திருச்சியில் நல்ல செய்தி.. மிஸ் பண்ணிடாதீங்க
திருச்சி: குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தீவிரமாக படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேர்வு குறித்து புரிதல் புரிதல் கிடைக்க அற்புதமான வாய்ப்பு உருவாகி உள்ளது. திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மாதிரி தேர்வு வரும் 11-ந் தேதி நடக்கிறது.
தமிழக அரசு பணியில் சேர வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. தற்போதைய நிலையில் லட்சக்கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறார்ர்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பல அரசு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட வில்லை. மிக குறைந்த அளவிலேயே காலி பணியிங்கள் நிரப்பப்பட்டன. அண்மையில் நடந்து முடிந்த குரூப் 2, 2ஏ தேர்வுகளின் மூலம் 5,860 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதேபோல் குரூப் 4 பணியிடங்களை பொறுத்தவரை சுமார் 10000 பணியிடங்கள் நிரப்பியது தமிழக அரசு. இப்படி பல்வேறு அரசு தேர்வாணைய முகமைகள் மூலமாக இரண்டரை ஆண்டுகளில் மொத்தம் 60,567பேர் அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளாக கூறப்படுகிறது. வரும் ஜூன் மாதத்துக்குள், மேலும் 10 ஆயிரம் பேர் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதனை உறுதி செய்யும் வகையில், குரூப் 4 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற போகிறது. இதன் மூலம் 108 விஏஓ பணியிடங்கள், 2,442 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், சுமார் 1,700 தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் வனக்காவலர் பணியிடங்கள் என மொத்தமாக 6,244 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
இதேபோல் வன காப்பாளர் தேர்வுக்கான (1,264 காலியிடங்கள்) அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிட்டு, ஜுன் மாதம் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதேபோல் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு வரும் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடங்களை கணக்கிட்டால் 10000 என்கிற அளவில் வருகிறது. எனவே விரைவில் தமிழ்நாட்டில் 10000 பேர் தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில்இதில் அதிகபட்ச பணியிடங்கள் குரூப் 4 பணியிடங்கள் என்பதால் அதில் சேர அதிகம் பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். பல லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இந்நிலையில் குரூப் 4 தேர்வு எப்படி இருக்கும் என்பது குறித்து புரிதல் வேண்டும் என்று விரும்புவோருக்கு திருச்சி மாவட்ட மைய நூலகம் நல்ல செய்தியை கூறியுள்ளது.
இதுபற்றி திருச்சி மாவட்ட மைய நூலகம் முதல்நிலை நூலகர் தனலட்சுமி கூறுகையில், "திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-4 (டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4) போட்டித் தேர்வுக்கான மாதிரி தேர்வு வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
மாதிரி தேர்வில் 9-ம் வகுப்பு சமூகஅறிவியல், டிசம்பர் 2023-ம் மாத நடப்பு நிகழ்வுகள் மற்றும் கணிதம் ஆகிய பாட பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும். இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. மாணவர்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆர்.விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும்.
மாதிரி தேர்வு முடிந்தவுடன் ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்கள் உடனடியாக தெரிவிக்கப்பட்டு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு மதிப்பெண் அதிகப்படுத்துவதற்கு அறிவுரைகளும் வழிமுறைகளும் வழங்கப்படும். டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கு தயார் செய்யும் மாணவ-மாணவிகள் தேர்வில் கலந்து கொண்டு பயன் அடைய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி.. வினாத்தாளை மாற்றி கொடுத்த அதிகாரி.. சுற்றி வளைத்த அரசு ஊழியர்கள் -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications