ஏர்போர்ட்டில் வேலை பார்க்க ஆசையா? 309 பணியிடங்கள்.. டிகிரி முடிச்சவங்களுக்கு சூப்பர் சான்ஸ்
சென்னை: இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் மத்திய அரசு பணிகளில் இந்த பணியும் ஒன்று என்பதால் இளைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். மாதம் ரூ.40 ஆயிரம் முதல் 1 லட்சத்து 40 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். யார் யார் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India) மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் 137 விமான நிலையங்களை இந்த விமான நிலைய ஆணையமே நிர்வகிக்கிறது. மத்திய அரசின் கீழ் செயல்படும் சட்டப்பூர்வ ஆணையம் என்பதால் இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் என பல்வேறு வசதிகள் கிடைக்கின்றன.

இதனால், தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் மத்திய அரசு பணிகளில் இந்த பணியும் உள்ளது. இந்த நிலையில்தான், தற்போது காலியாக உள்ள 309 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.
பணியிடம் & கல்வித் தகுதி:
ஜூனியர் எக்ஸ்கியூட்டிவ் (ஏர் டிராஃபிக் கன்ட்ரோல்) -309 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. கல்வி தகுதியை பொறுத்தவரை பி.எஸ்.சி (இயற்பியல், கணிதம்) அல்லது ஏதாவது ஒரு பாடப்பிரிவு கொண்ட என்ஜினியரிங் பட்டம் முடித்து இருந்தால் போதும். கணிதம் மற்றும் இயற்பியல் ஏதாவது ஒரு செமஸ்டரில் படித்து இருக்க வேண்டும். ஆங்கிலம் எழுத மற்று பேச நன்கு தெரிந்து இருப்பது அவசியம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 27 ஆகும். எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது, எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 32 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 30 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 15 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு:
ஜூனியர் எக்ஸியூட்டிவ் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000-வரை சம்பளமாக வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை கணிணி வழியிலான தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, குரல் பரிசோதனை, மனோவியல் சோதனை/ உளவியல் மதிப்பீடு/ உடல் மருத்துவ பரிசோதனை/ உள்ளிட்டவை நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணமாக ரூ.1,000- செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.டி/ எஸ்.சி/ மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரருக்கு கட்டணம் கிடையாது.
எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?
* விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 25.04.2025
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.05.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Detailed%20ATC%20Advertisement%2002-2025-CHQ.pdf
-
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications