சம்பளம் + அலோவன்ஸ்.. மதுரை ஆவினில் தேர்வின்றி சூப்பர் வேலை.. ஜனவரில் 20ல் இன்டர்வியூ
மதுரை: தமிழ்நாட்டில் ஆவினில் காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆவினில் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கான இன்டர்வியூ ஜனவரி 20ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் உள்ளது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது மதுரை ஆவினில் காலியாக உள்ள சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் எக்ஸிக்கியூட்டிவ் பிரிவில் 3 காலியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட உள்ளது.
இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாஸ்டர் டிகிரி/பேச்சுலர் டிகிரி படிப்புகளை மார்க்கெட்டிங், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அல்லது தொடர்புடைய பிரிவில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதோடு FMGG அல்லது Dairy Industry-ல் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதேபோல் நல்ல கம்யூனிகேஷன் மற்றும் இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். மார்க்கெட்டிங் டூல்ஸ் மற்றும் சாப்ட்வேர், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். டிரைவிங் லைசென்ஸ் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அடிப்படை சம்பளமாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. அதோடு இன்செட்டிவ் என்பதும் வழங்கப்படும உள்ளது. டிராவல் அலோனவன்ஸ் என்ற வகையில் மாதம் ரூ.3 ஆயிரத்துக்குள் வழங்கப்படும். இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 6 மாதம் பணியில் இருப்பார்கள்.

இந்த பணிக்கு எழுத்து தேர்வு எதுவும் இல்லை. இன்டர்வியூ முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ என்பது ஜனவரி மாதம் 20ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது மதுரை ஆவின் கேம்பஸ் (Admin Block)-ல் நடக்கும். நேர்க்காணலில் பங்கேற்பவர்கள் அசல் கல்வி சான்றிதழ்கள், பயோடேட்டாவுடன் செல்ல வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களை பெற 94896 19001-04 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications