நோ எக்ஸாம்.. இன்டர்வியூ மட்டுமே.. மாதசம்பளம் ரூ.43,000.. திண்டுக்கல் ஆவினில் அசத்தல் வேலைவாய்ப்பு
திண்டுக்கல்: தமிழ்நாட்டில் ஆவினில் காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் ஆவினில் எழுத்து தேர்வு இன்றி இன்டர்வியூ மூலம் பணிக்கு மாதம் ரூ.43 ஆயிரம் சம்பளத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு சார்பில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் உள்ளது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர், வேலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஆவின் வேலைகளுக்கு ஆட்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்ட ஆவினில் காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்டில் காலியாக உள்ள வெட்னரியன்ஸ் (Veterinarians) பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. பணிக்கு இளங்கலை வெட்னரி சயின்ஸ் & அனிமல் ஹஸ்பன்ட்ரி படிப்பை (B.V.Sc. & A.H) முடித்திருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் டூவீலர் அல்லது கார் வைத்திருக்க வேண்டும்.
இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் Propulsion charges ஆக ரூ.8 ஆயிரம், Indiviual Incentive ஆக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மாதம் ரூ.43 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும்.
விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் நேரடியாக ஏப்ரல் மாதம் 12ம் தேதி நடக்கும் நேர்க்காணலில் நேரடியாக பங்கேற்கலாம். நேர்க்காணல் No-9, East Govindapuram, Dindigul - 624 001 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. நேர்க்காணலில் பங்கேற்பவர்கள் அசல் கல்வி சான்றிதழ்கள், பயோடேட்டாவுடன் செல்ல வேண்டும்.

-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications