சென்னையிலேயே ஐடி வேலை.. Accenture-ல் இருந்து வந்தாச்சு அறிவிப்பு.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் Accenture நிறுவனத்தில் அப்ளிகேஷன் டெவலப்பர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனமான ஆக்சென்ச்சர் (Accenture) நம் நாட்டின் பெங்களூர், டெல்லி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஆக்சென்ச்சர் நிறுவனம் உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மற்றும் கோவையில் ஆக்சென்ச்சர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் உள்ள ஆக்சென்ச்சர் நிறுவன வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி சென்னை ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் அப்ளிகேஷன் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அடிப்படை கல்வியாக ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி அல்லது என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும் ASP.NET MVC தெரிந்திருக்க வேண்டும். மேலும் சி, எஸ்க்யூஎல் சர்வர் (SQL Server), அறிந்து வைத்திருக்க வேண்டும். ஜவா ஸ்கிரிப்ட் (Java Script), JQuery, Angular JS ஆகியவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வாகும் நபர்களின் பணி என்பது ASP.NET MC, C, SQL Server பயன்படுத்தி அப்ளிகேஷன் டிசைன், டெவலப், மெயின்டெயின் செய்வது தான். மேலும் Code Reviews, Unit Testing, Integration Testing உள்ளிட்டவையும் முக்கிய பணியாகும் இருக்கும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு எத்தனை பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்? அவர்களின் சம்பளம் என்ன? என்பது பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அதிகானவர்கள் தேர்வு செய்யப்படுவதோடு, அவர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மேலும் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் பற்றியும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை விரைவாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய விரும்புவோர் Accenture நிறுவனத்தின் இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பணி தொடர்பான கூடுதல் விபரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications