Accenture-ல் வேலை.. தொடக்கமே ரூ.38,000 சம்பளம்.. சென்னை, கோவையிலேயே பணி செய்ய சூப்பர் சான்ஸ்!
சென்னை: இந்தியாவில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஆக்சென்ச்சர்-ல்(Accenture) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. 2023ல் படிப்பை முடித்தவர்கள், 2024ல் படிப்பை முடிப்பவர்களும் இதற்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் சென்னை, கோவையிலும் பணியை பெற முடியும். அதோடு தொடக்கத்தில் மாதசம்பளமாக ரூ.38 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவின் முன்னனி ஐடி நிறுவனங்களில் ஒன்று அக்சென்ச்சர் (Accenture). சென்னை, கோவை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் அக்சென்ச்சர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் தற்போது அப்ளிகேஷன் டெவலப்மென்ட் அசோசியேட்ஸ் (Application Development Associates) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
மாத சம்பளம்: அப்ளிகேஷன் டெவலப்மென்ட் அசோசியேட்ஸ் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்து 700 சம்பளமாக வழங்கப்படும். இதனை 12 மாதத்துக்கு கணக்கீட்டு பார்த்தால் தொடக்கத்திலேயே மாத சம்பளமாக ரூ.38,391 வரை கிடைக்கும்.
கல்வி தகுதி: அப்ளிகேஷன் டெவலப்மென்ட் அசோசியேட்ஸ் பணிக்கு பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்எஸ்சி பிரிவுகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்புகளை முடித்தவர்களும், எம்சிஏ படித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இந்த படிப்புகளை கல்லூரி சென்று முழுநேரமாக முடித்திருக்க வேண்டும். பார்ட் டைம் முறையில் படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது.
இதுதவிர விண்ணப்பம் செய்வோர் HANA, CDS, AMDP உள்ளிட்டவற்றில் ஏபிஏபி டெவலப்மென்ட் புரிதலை கொண்டிருக்க வேண்டும். அதோடு ஆங்கிலத்தில் பேசும் திறன், .NET (ASP.NET/ASP.NET MVC) புரிந்து கொண்டு செயலாற்றும் திறமையை கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கு 2023ல் படிப்பை முடித்தவர்கள், 2024ல் படிப்பை முடிப்பவர்களும் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்க நல்ல சான்ஸ் கிடைத்துள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: விண்ணப்பத்துக்கான கடைசி தேதி என்று எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Accenture நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே, குர்கிராம், கொல்கத்தா, இந்தூர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான கூடுதல் விபரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
ஒரே நாளில்.. அப்படியே ஸ்டன் ஆன ஊழியர்கள்.. எத்தனை வருட ஏக்கம்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications