‛ரொம்ப ஈஸி’’.. Accenture-ல் மாதம் ரூ.50,000 வரை சம்பளம்.. அக்கவுண்ட் உள்பட 2 பிரிவில் வேலைவாய்ப்பு
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான Accenture-ல் மாதம் ரூ.50 ஆயிரம் வரையிலான சம்பளத்தில் அக்கவுண்ட்ஸ் உள்பட 2 பிரிவுகளில் பணியாற்ற தேவையான Non IT பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நம் நாட்டில் முன்னணியில் உள்ள ஐடி நிறுவனங்களில் ஒன்று ஆக்சென்ச்சர் (Accenture). தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட பிற மாநிலங்களின் முக்கிய நகரங்களின் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தான் ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் Non IT Roles-ல் வகையில் 2 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது.
இதில் முதலாவது நாம் பார்ப்பது அக்கவுண்டிங் மற்றும் பைனான்ஸ் பிரிவாகும். இந்த பிரிவில் பணியாற்ற விரும்புவோர் பிகாம், எம்காம், எம்பிஏ, பிசிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும். அதோடு அக்கவுண்டிங் மற்றும் பைனான்ஸ் பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளமாக ரூ.40 ஆயிரம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் இந்த சம்பளம் என்பது மாறுபட வாய்ப்புள்ளது. இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்களின் சம்பளம் என்பது சிறிது மாறுபடும்.
இரண்டாவது நாம் பார்ப்பது கஸ்டமர் சப்போர்ட் ரோல். இந்த பணிக்கு எந்த டிகிரி முடித்திருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். சம்பந்தப்பட்ட பணியில் 0 முதல் 3 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்கள் கூட விண்ணப்பம் செய்யலாம். ஆனால் ஆங்கிலத்தில் நன்கு பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் என்பத வழங்கப்பட உள்ளது.
இந்த 2 பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு நிறுவனம் சார்பில் எம்பிஏ மற்றும் 500 சான்றிதழ் படிப்புகளை படிக்க உதவிகள் 100 சதவீதம் ஸ்பான்சர்ஷிப் வழங்கப்படும். மேலும் நிறுவனம் அமைந்துள்ள நகரங்களில் வீடு முதல் அலுவலகம், அலுவலகம் முதல் வீடு வரை வாகன வசதி ஏற்பாடு செய் தரப்படும். ஹெல்த் இன்சூரன்ஸ், 24X7 என்ற முறையில் இலவச ஜிம் மற்றும் உணவுக்கான கார்டு (Meal Card) வழங்கப்படும். இதுதவிர சம்பளத்துடன் கூடிய 30க்கும் அதிகமான நாட்கள் விடுமுறை வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பத்துக்கான கடைசி நாள் குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது. மேலும் ஆக்சென்ச்சர் நிறுவனம் சார்பில் பணி தொடர்பான விண்ணப்பம் செய்வது மற்றும் வேலைக்கான நடைமுறையில் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. இதனால் விண்ணப்பம் செய்வோர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications