Accenture வேலைவாய்ப்பு.. கோவையில் பணி நியமனம்.. வெளியான புதிய அறிவிப்பு.. மிஸ் பண்ணாதீங்க
கோவை: முன்னணி ஐடி நிறுவனமான ஆக்சென்ச்சரில்(Accenture) இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கோவையில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
தமிழககத்தில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் ஆக்சென்ச்சர் (Accenture). இந்த நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவையில் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் கிளைகள் உள்ளன.

இந்நிலையில் தான் தற்போது கோவையில் செயல்பட்டு வரும் ஆக்ச்சென்ச்சர் நிறுவனத்தில் . காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி கோவை ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் பிசினஸ் அனலிஸ்ட் (Business Analyst) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு கல்வி தகுதியாக AX Technical ஸ்கில்ஸ், Ax Dynamics ஸ்கில்ஸ் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ZOHO-வில் வெளியான புதிய அறிவிப்பு.. டிகிரி போதும்.. அனுபவம் வேண்டாம்! சென்னையிலேயே பணி நியமனம்
இதுதவிர பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் 365 காமர்ஸ் டெக்னிக்கல்லில் (Microsoft Dynamics 365 Commerce Technical) திறமை கொண்டிருக்க வேண்டும். மேலும் ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் பாடி ஆஃப் நாலெட்ஸ் (PMBOK or Project Management body of knowledge)அறிந்து வைத்திருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி பிசினஸ் அனலிஸ்ட் பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதாவது மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் ஏகெ்ஸ் டெக்னிக்கல் டெவலப்மென்ட் பிரிவில் குை பிராக்டிக்கல் மற்றுமு் டெக்னில்கல் முறையில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
TCS வேலைவாய்ப்பு.. பிஏ, பிகாம், பிஎஸ்சி படிப்போருக்கு குட்நியூஸ்.. செப்டம்பர் 11ம் தேதி கடைசி நாள்
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி நேர்க்காணலின்போது தெரிவிக்கப்படும். மேலும் பணி அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் நியமனம் செய்யப்படுவார்கள்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் விண்ணப்பம் செய்யும் தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications