ZOHO-வில் வெளியான புதிய அறிவிப்பு.. டிகிரி போதும்.. அனுபவம் வேண்டாம்! சென்னையிலேயே பணி நியமனம்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோவில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிக்கலாம்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று ஜோஹோ. சென்னை, மதுரை, தென்காசி உள்பட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் சென்னையில் மட்டுமே செயல்பட்டு வரும் சூழலில் ஜோஹோ பல இடங்களில் இயங்கி வருகிறது.

இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் இந்த நிறுவனத்தில் பணி செய்ய விரும்புகின்றனர். மேலும் ஜோஹோ நிறுவனத்தை குறிவைத்து பலரும் தேர்வு மற்றும் இன்டர்வியூக்களில் பங்கேற்று வருகின்றன. இந்நிலையில் தான் தற்போது ஜோஹோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி என்ன?: தற்போதைய அறிவிப்பின்படி ஜோஹோ நிறுவனத்தில் டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் (Technical Support Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் போன், இ-மெயில் மூலம் கஸ்டமர் Inquriry-களுக்கு பதிலளிக்க வேண்டி இருக்க வேண்டும். கஸ்டமர்களுக்கான பிரச்சனைகளை ஒவ்வொரு ஸ்டெப்பாக தீர்த்த வைத்திருக்க வேண்டும். மேலும் கஸ்டமர் Feedback விபரங்களை தினமும் அப்டேட் செய்ய உள்ளிட்ட மேலும் சில பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கல்வி தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி, இன்ஜினியரிங் படிப்பை 2014 முதல் 2024ம் ஆண்டுக்குள் முடித்திருக்க வேண்டும். மேலும் மேற்கூறிய பிரிவில் 0 முதல் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவத்தை பொறுத்தவரை பூஜ்ஜியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அனுபவம் இல்லாதவர்கள் கூட விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் Fin-tech industry பணியாற்றிய அனுபவம் இருந்தால் அது விண்ணப்பத்தாரர்களுக்கு பிளஸ் பாயிண்ட்டாகும்.
புதிய டெக்னலாஜியை கற்று கொள்வதில் ஆர்வம் இருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். இதுதவிர பிரச்சனைகளை தீர்க்கும் திறமை, நைட் ஷிப்ட்டில் பணியாற்றும் திறமை இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. விண்ணப்பம் செய்வோருக்கு தகுதி மற்றும் பணி அனுபவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் இந்த பணிக்கான விண்ணப்பம் செய்யும் தேதி முடிவுக்கு வரலாம். இதனால் இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது சிறந்தது.
சென்னையில் பணி: இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு அடுத்தக்கட்ட ரவுண்ட்டுக்கு அழைக்கப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications