Accenture-ல் அசத்தலான வேலை.. பணி அனுபவம் இல்லாமலே ரூ.4.60 லட்சம் வரை சம்பளம்.. சென்னையிலும் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான Accenture-ல் காலிப்பணியிடம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சென்னையில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். மேலும் சம்பளமாக ரூ.4.60 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.

முன்னணி ஐடி நிறுவனமான ஆக்சென்ச்சர் (Accenture) இந்தியாவில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடகா தலைநகர் பெங்களூர், தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத், மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புனே, மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தா, ஒடிசா தலைநகர் புவனேஸ்வர், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர், மத்திய பிரதேசத்தின் இந்தூர், ஹரியானாவின் குர்கிராம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.

it jobs job jobs

அதேபோல் தமிழகத்தில் 2 இடங்களில் ஆக்சென்ச்சர் நிறுவனம் இயங்கி வருகிறது. அதன்படி தலைநகர் சென்னை மற்றும் கோவையில் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. இந்நிலையில் தான் ஆக்ச்சென்ச்சர் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

ஆக்சென்ச்சர் சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி பேக்கேஜ்ட் அப் டெவலப்மென்ட் அசோசியேட் (Packaged App Development Associate) பிரிவில் அசோசியேட் சாப்ட்வேர் என்ஜினியர் (Associate Software Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்சிஏ, எம்எஸ்சி உள்ளிட்ட பிரிவுகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். 2021, 2021, 2023, 2024ம் ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு அரியர்ஸ் என்பது இருக்க கூடாது. இல்லாவிட்டால் தொடர்புடைய துறையில் 0 முதல் 11 மாத பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

பணி அனுபவத்தை பொறுத்தமட்டில் பூஜ்ஜியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் 2024ம் ஆண்டு படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். ஆனாலும் விண்ணப்பம் செய்வோர் அனைவரும் மேற்கூறிய படிப்பு மட்டுமின்றி கீழ்காணும் விஷயங்களில் பணியாற்றிய அனுபவம் அல்லது அதுபற்றிய விபரங்களை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அதன்படி பார்த்தால் HANA, DS, AMDP-யில் ஏபிஏபி டெவலப்மென்ட்டை (ABAP Develoment) நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும். Salesforce.com-ன் அனலிசிஸ் மற்றுமம் கஸ்டமைசேஷனில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். J2EE மற்றும் Full Stack Development-ல் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் .NET(ASP.NET/ASP.NET MVC) தெரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால்பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி விண்ணப்பத்தாரர்கள் பிரச்சனையை தீர்க்கும் திறன், நல்ல கம்யூனிகேசன் திறமை கொண்டிருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ. 4 லட்சத்து 60 ஆயிரத்து 700 வழங்கப்பட உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியாவில் உள்ள எந்த ஆக்சென்ச்சர் பிராஞ்சில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம். அதன்படி பார்த்தால் சென்னை, கோவையில் கூட பணி வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் பற்றியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இந்த பணியை விரும்புவோர் முடிந்தவரை விரைவாக விண்ணப்பம் செய்யலாம்.

மேலும் ஆக்சென்ச்சர் நிறுவனத்தை பொறுத்தவரை ஒரு விதிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ஒருவர் ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் இன்டர்வியூ ‛அட்டென்' செய்தால் அடுத்த 3 மாதத்துக்கு பிறகு தான் இன்னொரு பணிக்கு விண்ணப்பிக்க முடியும். அந்த வகையில் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கடந்த 3 மாதத்தில் இந்த நிறுவனத்தில் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் நேர்க்காணலில் பங்கேற்று இருக்க கூடாது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+