அனுபவம் வேண்டாம்.. சென்னை - கோவை உள்பட 12 இடங்களில் காலியிடங்கள்.. அழைக்கும் Accenture
சென்னை: Accenture ஐடி நிறுவனத்தில் சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத் உள்பட 12 இடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய அனுபவம் வேண்டாம். கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக அக்சென்ச்சர் (Accenture) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது Packaged App Development Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் 0 முதல் 23 மாதங்களுக்கு மேல் பணி செய்திருக்கும் அனுபவம் இருக்க கூடாது. இதனால் பணி அனுபவம் இல்லாமல் இருந்தாலும் கூட விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் அவர்களுக்கு என்று சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும்.
அதன்படி விண்ணப்பம் செய்ய விரும்புவோர் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்சிஏ, எம்எஸ்சி உள்ளிட்ட பிரிவுகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், டேட்டா சயின்ஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் உள்ளிட்ட படிப்புகளை 2024ம் ஆண்டில் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு அரியர்ஸ் இருக்க கூடாது.
மேலும் HANA, CDS, AMDP, பெர்பாமன்ஸ் அனலிசிஸ் உள்ளிட்டவற்றின் அடிப்படையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல் Salesforce.com-ன் அனலிசிஸ் மற்றும் கஸ்டமைசேஷனில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். J2EE மற்றும் Full Stack Development-ல் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் .NET(ASP.NET/ASP.NET MVC) தெரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி விண்ணப்பத்தாரர்கள் பிரச்சனையை தீர்க்கும் திறன், நல்ல கம்யூனிகேசன் திறமை கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அக்சென்ச்சரில் கடந்த 3 மாதத்தில் நடந்த இண்டர்வியூவில் பங்கேற்றவராக இருக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
தற்போது பெங்களூர், ஹைதராபாத், புனே, மும்பை குர்கிராம்,கொல்கத்தா, இந்தூர், ஜெய்ப்பூர், அகமதாபாத், புவனேஸ்வர் உள்ளிட்ட இடங்களிலும், தமிழகத்தில் சென்னை, கோவையில் காலியிடங்கள் உள்ளது. இதில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் நியமனம் செய்யப்படலாம்.எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் பற்றியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இந்த பணியை விரும்புவோர் முடிந்தவரை விரைவாக விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications