ஐடி ஊழியர்களே 13% சம்பள உயர்வு.. 2 வருடத்திற்கு பின் வந்தது குட் நியூஸ்.. அசெஞ்சர் பக்கம் ஆரவாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அசெஞ்சர் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு 3- 13 சதவிகிதம் வரை சம்பள உயர்வை அறிவித்து உள்ளது. லெவல் 8 அதாவது துணை மேனேஜர் தொடங்கி அதற்கு மேல் உள்ள ஊழியர்களுக்கு இந்த சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இது எல்லா ஊழியர்களுக்கும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு வருடங்களில் இந்த பிரிவினருக்கு முதல்முறையாக சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐடி துறை எவ்வளவு மோசமாக அடி வாங்கி உள்ளது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் ஆகும்.

job jobs

பலருக்கு 10 சதவிகிதத்திற்கும் மேல் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இரண்டு வருட காத்திருப்பிற்கு பின் அளிக்கப்படும் இந்த சம்பள உயர்வு போதுமானதாக இல்லை என்று ஊழியர்கள் கருதுகின்றனர்.

அசெஞ்சர் நிறுவனத்தின் வருவாய் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் முன்னேற்றம் அடையாத நிலையில், சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 2 வருடங்களுக்கு பின் இப்போது வழங்கப்பட்டு உள்ளது. முக்கியமாக ஏஐ வந்த பின் அசெஞ்சர் வருவாய் பெரிய அளவில் சரிந்து உள்ளது.

இதில் உலக அளவில் மொத்தமாக 50 ஆயிரம் ஊழியர்களுக்கு பதவி உயர்வும், இந்தியாவில் 15 ஆயிரம் ஊழியர்களுக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டு உள்ளது. பல ஊழியர்களுக்கு இந்த சுற்றில் சம்பள உயர்வு அளிக்கப்படவில்லை. அவர்களுக்கு அடுத்த சுற்றில் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஐடி துறை நிலவரம்

ஏப்ரல் மாதத்தில் ஐடி துறையில் பணிக்கு சேருவோர் எண்ணிக்கை 16 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கிளவுட் நவீனமயமாக்கல் மற்றும் உலகளாவிய திறன் மையங்களின் (GCCs) விரிவாக்கம் போன்ற காரணங்களால் ஏப்ரல் மாதத்தில் IT துறையில் பணியமர்த்தல் புதிய உச்சத்தை அடைந்து உள்ளது. .

இந்தியாவின் IT பணியமர்த்தல் கடந்த மாதம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுகளை விட. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட பணியமர்த்தலை விட அதிகம் ஆகும். GCCகள் காரணமாக பணியமர்த்தல் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.

பணியிடங்கள் தொடர்பான விவரங்கள்

டிசிஎஸ்

பணியமர்த்தல்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) FY26 இல் ஆயிரக்கணக்கான புதியவர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் செய்யப்பட்ட பணியமர்த்தலுக்கு இணையாக, இந்த நிதியாண்டில் 42,000 புதியவர்களை பணியமர்த்துவதாக அந்த நிறுவனம் கூறி உள்ளது. .

சம்பள உயர்வு

டிசிஎஸ் நிறுவனம் இந்த ஆண்டு சம்பள உயர்வை ஒத்திவைத்து உள்ளது. ஏப்ரல் மாதம் அதிகரிக்க வேண்டியது சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.

job jobs

பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் பணிநீக்கங்கள்

மார்ச் 31, 2025 அன்று முடிவடைந்த காலாண்டில் டிசிஎஸ் 13.3 சதவீத attrition விகிதத்தை கொண்டு உள்ளது. டிசிஎஸ் ஐடி நிறுவனம் கடந்த ஆண்டு 6,433 பணியாளர்களை எடுத்தது. 24ஆம் நிதியாண்டின் 4ஆம் காலாண்டில் 6,01,546 ஆக இருந்த மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 6,07,979 ஆக உள்ளது. டிசம்பர் 2024 காலாண்டில் 6,07,354 ஆக இருந்த தொழிலாளர் எண்ணிக்கையில் மேலும் 625 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

டிசிஎஸ் நிறுவனத்தின் பணிநீக்கங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. இருப்பினும், அமெரிக்காவில் உள்ள பல இந்திய ஊழியர்கள் நிறுவனம் சார்பாக பணி நீக்கம் செய்யப்படலாம்.

இன்ஃபோசிஸ்

பணியமர்த்தல்

2026 நிதியாண்டில் 20,000 க்கும் மேற்பட்ட புதியவர்களை பணியமர்த்த ஐடி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக இன்ஃபோசிஸ் சிஎஃப்ஓ ஜெயேஷ் சங்க்ராஜ்கா அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு இந்த நிறுவனம் 6,388 ஊழியர்களை பணியமர்த்தியது, அதன் மொத்த பணியாளர்களை 323,578 ஆக இது உயர்த்தியது. இது முந்தைய நிதியாண்டில் இருந்த 317,240 ஊழியர்களை விட சற்று அதிகமாகும்.

சம்பள உயர்வு

இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும் இது. இதன் சம்பள உயர்வுகளில் பெரும்பகுதி ஜனவரியிலேயே வெளியிடப்பட்டது, மீதமுள்ளவை ஏப்ரல் 1 முதல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்ஃபோசிஸில் உள்ள பெரும்பாலான ஊழியர்களின் சம்பள உயர்வு சராசரியாக 5-8 சதவீதம் வரை இருக்கும் என்று முன்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது முந்தைய ஆண்டை விட குறைவாக உள்ளது.

job jobs

இதற்கிடையில், சிறந்த செயல்திறன் கொண்டவர்கள் 10-12 சதவீத சம்பள உயர்வு பெற்றுள்ளனர். இன்ஃபோசிஸ் ஊழியர்களின் செயல்திறனை நான்கு வகைகளாகப் பிரிக்கிறது - சிறப்பானது, பாராட்டத்தக்கது, எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தது மற்றும் முன்னேற்றம் தேவை.

பணிநீக்கங்கள்

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் 400க்கும் மேற்பட்ட ட்ரெய்னிகளை மைசூரு வளாகத்தில் பணிநீக்கம் செய்துள்ளது. அதாவது இவர்கள் 3 டெஸ்டுகளில் தோல்வி அடைந்ததால் பயிற்சியில் இருந்து நீக்கி வேலையை விட்டு நீக்கி உள்ளது. கடந்த இரண்டரை வருடமாக இவர்கள் ட்ரெயினி என்ற பொறுப்பின் கீழ் இங்கே வேலை பார்த்து வந்துள்ளனர்.

விப்ரோ

பணியமர்த்தல்

விப்ரோ மார்ச் 31, 2025 அன்று முடிவடைந்த காலாண்டில் வெறும் 612 ஊழியர்களை மட்டுமே சேர்த்துள்ளது. FY26 பணியமர்த்தல் இலக்கை விப்ரோ குறிப்பிடவில்லை.

பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் பணிநீக்கங்கள்

FY25க்கான விப்ரோவின் நிகர பணியாளர்கள் எண்ணிக்கை 1,032 உயர்ந்தது. இதனால் பணியாளர்களின் எண்ணிக்கை 2,33,346 ஆக உயர்ந்துள்ளது. பணிநீக்கங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.

job jobs

சம்பள உயர்வு

விப்ரோ நிறுவனம் சம்பள உயர்வு குறித்து எந்த ஒரு பெரிய அப்டேட்டையும் கொடுக்கவில்லை. ஹேக் தேதிக்கு நெருக்கமாக நிறுவனம் அறிவிப்பு வெளியிடும் என்று தெரிவித்துள்ளது.

HCL டெக்னாலஜிஸ்

பணியமர்த்தல்

மார்ச் 31, 2025 அன்று முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் 2,665 ஊழியர்களைச் சேர்த்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட (4,061 பணியாளர்கள்) குறைவு ஆகும். இந்த நிறுவனம் FY 25 இல் 7,829 புதியவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.

job jobs

பணியாளர்கள் எண்ணிக்கை, பணிநீக்கம் மற்றும் சம்பள உயர்வு

மார்ச் காலாண்டில் மொத்த எண்ணிக்கை 2,23,420 ஆக இருந்தது. ஊழியர்களின் எண்ணிக்கை 7,398 ஆக குறைந்துள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. பணிநீக்கம் மற்றும் சம்பள உயர்வு தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. இதனால் இந்த வருடம் ஐடி துறையில் மிகப்பெரிய அளவில் சரிவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+