நோ எக்ஸாம்.. இண்டர்வியூ மட்டுமே! ரூ.45,000 வரை சம்பளம் -தமிழக ஏர்போர்ட்களில் குவிந்திருக்கும் வேலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி, கோவை சர்வதேச விமான நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆண்களும், பெண்களும் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.17 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.

சென்னை விமான நிலையம்: சென்னை விமான நிலையத்தில் துணை மேலாளர்: சென்னை விமான நிலையத்தில் துணை மேலாளர் (பயணிகள்) பணிக்கு 8 பேர், டூட்டி ஆபிசர் (பயணிகள்) பணிக்கு 8 பேர், கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ்/ஜூனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு 43 பேர் என 59 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 AIASL recruitment 2023 for Tamil Nadu Airports jobs including chennai

கோவை விமான நிலையம்: கோவை விமான நிலையத்தில் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ்/ஜூனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு 12 பேர், ஹேண்டிமேன் பணிக்கு 20 பேர் என மொத்தம் 32 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

திருச்சி விமான நிலையம்: திருச்சி விமான நிலையத்துக்கு கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ்/ஜூனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு 10 பேர், ஹேண்டிமேன் பணிக்கு 10 பேர் என மொத்தம் 20 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மதுரை விமான நிலையம்: மதுரை விமான நிலையத்தில் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ்/ஜூனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு 15 பேர், யூடிட்டிலிட்டி ஏஜென்ட் கம்ப் ராம்ப் டிரைவர் பணிக்கு 2 பேர், ஹேண்டிமேன் பணிக்கு 20 பேர் என மொத்தம் 37 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு: துணை மேலாளர் பணிக்க 55 வயதுக்குள்ளும், டூட்டி ஆபிசர் பணிக்கு 50 வயதுள்ளும், கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ், ஜூனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ், யூடிலிட்டி ஏஜென்ட் கம் ராம்ப் டிரைவர், ஹேண்டிமேன் பணிகளுக்கு 28 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு.

கல்வி தகுதி: துணை மேலாளர் பணிக்கு டிகிரி முடித்து 4 ஆண்டு வரை பயணிகள், கார்கோ பிரிவில் பணியாற்றி இருப்பதோடு 16 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். டூட்டி ஆபிசர் பணிக்கு டிகிர முடித்து 12 ஆண்டு விமான நிலையத்தில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் கஸ்டமர் எக்ஸிக்கியூட்டிவ் மற்றும் ஜூனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு 10, 12ம் வகுப்பு முடித்து ஏர்லைன், ஜிஎச்ஏ, கார்கோ, ஏர்லைட் டிக்கெட்டிங் பிரிவில் அனுபவம் அல்லது ஏர்லைன் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். யூடிலிட்டி ஏஜென்ட் கம் ராம்ப் டிரைவர் பணிக்கு 10ம் வகுப்பு முடித்து எச்எம்வி லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். ஹேண்டிமேன் பணிக்கு 10ம் வகுப்பு படித்து ஆங்கிலம் படிக்கவும், ஹிந்தி, தமிழ் புரிந்து பேசும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

மாதசம்பளம்: துணை மேலாளர் பணிக்கு ரூ.45 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். டூட்டி ஆபிசர் பணிக்கு ரூ.32,200, கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு ரூ.23,640 முதல் ரூ.25,980 வரையும், ஜூனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்யூட்டிவ் பணிக்கு ரூ.20,130 முதல் ரூ.23,640 வரையும், யூடிலிட்டி ஏஜென்ட் கம் ராம்ப் டிரைவர் பணிக்கு மாதம் ரூ.20,130 சம்பளமாக வழங்கப்படும். ஹேண்டிமேன் பணிக்கு மாதம் ரூ.17,850 சம்பளமாக கிடைக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.aiasl.in இணையதளத்தில் விண்ணப்பம் டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு நேர்க்காணலில் பங்கேற்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் படை வீரர்கள், எஸ்சி, எஸ்டி பிரிவனருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

நேர்க்காணல் தேதி: இந்த பணிகளுக்கு நேர்க்காணல் முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி துணை மேலாளர், டூட்டி ஆபிசர் பணிக்கான நேர்க்காணல் டிசம்பர் 26ம் தேதியும், கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ்/ஜூனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ் பிரிவில் சென்னை விமான நிலைய பணிக்கு டிசம்பர் 27 ம் தேதிம், மதுரை, திருச்சி, கோவை விமான நிலைய பணிக்கு டிசம்பர் 29ம் தேதியும் நேர்க்காணல் நடைபெற உள்ளது. யூடிட்டிலிட்டி ஏஜென்ட் கம் ராம்ப் டிரைவர், ஹேண்டிமேன் பணிக்கு டிசம்பர் 30ம் தேதி நேர்க்காணல் நடைபெற உள்ளது.

நேர்க்காணல் இடம்: இந்த நேர்க்காணல் மேற்கூறிய தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 12ம் தேதி வரை நடைபெறும். நேர்க்காணல் என்பது Office of the HRD Department, AI Unity Complex, Pallavaram Cantonment, Chennai - 600 043 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கு ஆண்கள், பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். இது ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். வேலைக்கு தேர்வாகும் நபர்கள் 3 ஆண்டுகள் வரை பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு அவர்களின் செயல்பாட்டை பொறுத்து பணி நீட்டிப்பு என்பது வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+