எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை.. 4,576 பணியிடங்கள்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ
சென்னை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஜூனியர் கணக்காளர், ஆய்வக உதவியாளர், மருத்துவமனை பல்துறை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உல்ள 4,576 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே பார்க்கலாம்.
மத்திய அரசுக்கு சொந்தமான எய்ம்ஸ் மருத்துவமனை நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ளன. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த மருத்துவமனைகளில் காலியாக உள்ள 4,576 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான அறிவிப்பை எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ளது. என்னென்ன பணியிடங்கள் உள்ளன? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: ஜூனியர் கணக்காளர், ஆய்வக உதவியாளர், மருத்துவமனை பல்துறை உதவியாளர், இசிஜி டெக்னீஷியன், நூலகர், ஓட்டுநர், யோகா பயிற்சியாளர், வார்டன், பெயிண்டர், செவிலியர், ரேடியோ கிராபி டெக்னிஷியன், உதவி பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர்கள், டேட்டா ஆப்ரேட்டர், நிர்வாக உதவியாளர், உதவி பொறியாளர், இஎன்டி டெக்னீஷியன், எலெட்ரீசியன், வரைவாளர், ஸ்ரோட் கீப்பர், பார்மிஸ்ட், பெயிண்டர், மெக்கானிக், பயோ மெடிக்கல் என்ஜினியர் என மொத்தம் 66 வகையான பிரிவுகளில் காலியாக உள்ள 4,576 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி: பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி கோரப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கன பணியிடங்கள் உள்ளன. இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கும் பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: பணியின் தன்மைகேற்ப வயது வரம்பு மாறுபடும். 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டோர்கள் வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளுக்கு ஏற்றபடி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளூம், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை: சிபிடி எனப்படும் கணிணி வழி ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ண்ப்ப கட்டணமாக ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.2,400 திருப்பி வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 07.01.2025 ஆகும். விண்ண்ப்பிக்க வரும் 31 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பங்களில் திருத்தம் இருந்தால் 12.02.2025 to 14.02.2025 வரை மேற்கொள்ளலாம். பிப்ரவரி 26 ஆம் தேதி மற்றும் 28 ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://rrp.aiimsexams.ac.in/advertisement/677cd0d849c05cf7ac74271a
-
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications