AIIMS Job: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை.. 1,353 பணியிடங்கள்.. 10ம் வகுப்பு முடித்தவர்களும் அப்ளை பண்ணலாம்!
சென்னை: மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி நிர்வாக அதிகாரி, எழுத்தர், உதவியாளர் என மொத்தம் 1,353 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முன்னணி மருத்துவக் கல்வி நிறுவனமாக எய்ம்ஸ் உள்ளது. மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் நோயாளிகளுக்கான சிகிச்சை ஆகியவற்றை வழங்கும் உயர்தர மருத்துவமனையாகும். டெல்லி, கவுகாத்தி, பாட்னா, போபால் என நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த எய்ம்ஸ் உள்ளது.

தமிழ்நாட்டில் மதுரைக்கு அருகில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள 1,353 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
உதவி நிர்வாக அதிகாரி / உதவியாளர் /, இளைய நிர்வாக உதவியாளர் / எழுத்தர்/,
ஜூனியர் என்ஜினியர் (சிவில், எலக்ட்ரிக்கல், ஜூனியர் அட்மினிஷ்ட்ரேட்டிவ் ஆபிசர், கேஷியர், ஜூனியர் அக்கவுண்ட் ஆபிசர், லேப் அசிஸ்டண்ட், டிரைவர், ரிஷப்சினிஸ்ட், ஜுனியர் வார்டன், ஹவுஸ் கீப்பர்கள் என மொத்தம் 52 வகையான பணியிடங்களில் 1,353 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வி தகுதி:
10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி, என்ஜினியரிங் ஆகியவை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வி தகுதி மாறுபடும், அதாவது ஜூனியர் என்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) பணிக்கு துறை சார்ந்த பிரிவில் என்ஜினியரிங் முடித்து இருக்க வேண்டும். சம்பளத்தை பொறுத்தவரை பதவி மற்றும் தகுதிக்கேற்ப மாறுபடும். குறைந்தபட்சம் ரூ.18,000 முதல் அதிகபட்சமாக ரூ.1,51,100 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். சில பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகவும் சிலவற்றிற்கு, 40 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி, தாழ்த்தப்பட்டோர் (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகள், பிற பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
கல்வி, தகுதி, பணியிடங்கள் விவரம் உள்ளிட்டவற்றில் முழுமையான விவரங்களை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்க்கும் தேர்வு அறிவிப்பில் பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.
தேர்வு முறை
சிபிடி எனப்படும் கணினி வழி தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதி வாய்ந்த தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி/EWS பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.2,400 ஆகும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 02.12.2025 கடைசி நாளாகும். தேர்வு நடைபெறும் நாள் 22.12.2025 to 24.12.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினைபடிக்க: https://aiimsexams.ac.in/advertisement/6915d3056d76b75af3e2187d
-
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 12ம் வகுப்பு தகுதிதான்.. ஆரம்பமே 21,500 சம்பளம்.. மதுரையில் பணியிடம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications