Amazon ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான அமேசான் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி அல்லது இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

அமேசான்.. இந்த நிறுவனம் ஆன்லைன் வர்த்தகம், க்ளைட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால்பதித்து செயல்பட்டு வருகிறது.

it jobs job

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வரும் இந்த அமேசான் நிறுவனம் நம் நாட்டில் சென்னை, பெங்களூர் உள்பட பல முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அமேசான் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி அமேசான் நிறுவனத்தில் டிவைஸ் அசோசியேட் (Device Associate) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
மேலும் QA மெத்தோடோலஜி அண்ட் டூல்ஸ் (Methodology and Tools) தெரிந்திருக்க வேண்டும்.

Preferred Qualification என்பது BE, B.Tech, MSC பிரிவில் IT மற்றும் எம்சிஏ உள்ளிட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் டெஸ்ட்டிங் அறிவு இருப்பதோடு, நல்ல அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். இருப்பினும் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்து டெஸ்ட்டிங் அறிவு இருந்தால் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த பணிக்கு ஆண்கள், பெண்கள் என்று இருதரப்பினரும் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்.

இதனால் விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் உள்ள அமேசான் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+