சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை.. ரூ.24 ஆயிரம் சம்பளம்!
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சென்னை எம்.ஐ.டி வளாகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.12,000 முதல் ரூ.24,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சென்னை எம்.ஐ.டி வளாகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. திட்ட விஞ்ஞானி, திட்ட உதவியாளர், அலுவலக உதவியாளர் என பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 22 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:
திட்ட விஞ்ஞானி (குழுத் தலைவர்) - 2 இடங்கள்
திட்ட உதவியாளர் நிலை II - 8 இடங்கள்,
திட்ட உதவியாளர் நிலை I - 6 இடங்கள்,
திட்ட தொழில்நுட்ப வல்லுநர் - 4 இடங்கள்,
அலுவலக உதவியாளர் - 1 என 22 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
கல்வித் தகுதியை பொறுத்தவரை 8 ஆம் வகுப்பு,10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். கல்வித்தகுதி குறித்த முழு விவரங்கள் தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பளம் எவ்வளவு?
திட்ட விஞ்ஞானி (குழுத் தலைவர்) - ரூ.40,000 முதல் ரூ.1,00,000 வரை
திட்ட உதவியாளர் நிலை II - ரூ.25,000 முதல் ரூ.60,000 வரை
திட்ட உதவியாளர் நிலை I - ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை
திட்ட தொழில்நுட்ப வல்லுநர் - ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை
அலுவலக உதவியாளர் - ரூ.12,000 முதல் ரூ.24,000 வரை வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
நேர்முகத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிவரங்கள் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப நகல்களை வரும் 10 ஆம் தேதிக்குள் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குநர், விண்வெளி ஆராய்ச்சி மையம்,
எம்.ஐ.டி வளாகம்,
அண்ணா பல்கலைக்கழகம்,
சென்னை - 600 044.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.annauniv.edu/pdf/TANII-Recruitment-Application-CAR.pdf
-
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications