செமவாய்ப்பு! மாதசம்பளம் ரூ.25,000.. அண்ணா பல்கலைக்கழகத்தில் அசத்தலான வேலை! ரெடியா?
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ஜினீயரிங், டிகிரி, மாஸ்டர் டிகிரி, சிஏ, ஐசிடபிள்ஏ, எம்காம் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பின்படி பணிக்கு விண்ணப்பம் செய்வோர் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்நிலையில் தான் காலியாக உள்ள பணியிடங்களின் விபரம், விண்ணப்பம் செய்வது குறித்த முழுவிபரம் வருமாறு:
அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது டீச்சிங் பெல்லோ (Teaching Fellow) பிரிவில் மொத்தம் 90 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. துறை வாரியாக பார்த்தால் கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐடி/ஏஐ அன்ட் டிஎஸ் பிரிவுக்கு 28 பேர், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் பிரிவுக்கு 22 பேர், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பிரிவுக்கு தலா 10 பேர், சிவில் என்ஜினீயரிங் பிரிவுக்கு 8 பேர், மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் பிரிவுக்கு 4 பேர், எஸ் அன்ட் எச்- கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு தலா 2 பேர் என மொத்தம் 90 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
என்ஜினீயரிங் சார்ந்த துறைகளுக்கு விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் 4 ஆண்டு பிஇ, பிடெக் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் பிரிவு பணிக்கு மாஸ்டர் டிகிரியில் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், பிஜிடிஎம், சிஏ, ஐசிடபிள்யூஏ எம்காம் உள்ளிட்ட படிப்புகளை படித்து முடித்திருக்க வேண்டும். சயின்ஸ் அன்ட் க்யூமனிட்டிஸ் பணிக்கு மாஸ்டர் டிகிரி முடித்து நெட், ஸ்லெட், செட் அல்லது பிஎச்டி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளமாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.annauniv.edu/ எனும் இணையதளம் வழியாக ஆன்லைனில் வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் 6 மாதம் வரை பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு தேவை இருக்கும்பட்சத்தில் பணி நீட்டிப்பு செய்யப்படும். அதிகபட்சமாக 3 ஆண்டு வரை பணி செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications