அனுபவம் வேண்டாம்.. டிகிரி போதும்! சென்னையில் இயங்கும் ஐடி நிறுவனம் தரும் சூப்பர் வேலைவாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனத்தில் அசோசியேட் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

சென்னையில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் அந்தாலஜி (anthology). இந்த நிறுவனத்தில் தற்போது அசோசியேட் சாப்ட்வேர் இன்ஜினியர் (Associate Software Engineer) பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

it jobs job jobs

தற்போதைய அறிவிப்பின்படி அசோசியேட் இன்ஜினியர் பணிக்கு இளநிலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் டிகிரி படிப்பை முடித்தவர்கள் அல்லது குறிப்பிட்ட பிரிவில் பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த அசோசியேட் சாப்ட்வேர் இன்ஜினியர் பிரிவில் 0 முதல் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். ஆனாலும் கூட அவர்களுக்கு என்று சில கண்டிஷன்கள் உள்ளன.

அதன்படி இ-லேனிங் டெக்னாலஜி தெரிந்திருப்பவர்கள், அமேசான் வெப் சர்வீஸ் மற்றும் சர்வர்லெஸ் டெக்னாலஜிகளான Kubernetes, DynamoDB, CloudFront, Aurora, Lambda, Event Bridge உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். வெப் சர்வீஸான REST API, Authentication, CI/CD lifecycles and pipelines பற்றிய அறிவு இருக்க வேண்டும்.

மேலும் Singl page JavaScript application, பிரேம்வொர்க்ஸ்களான React, Redux அல்லது Angular உள்ளிட்டவற்றில் light experience இருக்க வேண்டும். அதேபோல் ஜாவா மற்றும் காமன் ஜாவா பிரேம்வொர்க்ஸ், எஸ்க்யூஎல், NoSQL databases, டெஸ்ட் டிரைவன் டெவலப்மென்ட் உள்ளிட்டவற்றிலும் லைட் எக்ஸ்பிரியன்ஸ் இருக்க வேண்டும். ஸ்ட்ராங்க் ப்ராப்ளம் சால்விங் ஸ்கில்ஸ், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவில் இதுபற்றி தெரிவிக்கப்படவிலாம்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://careers.anthology.com இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கான அறிவிப்பு என்பது கடந்த 11ம் தேதி வெளியாகி உள்ளது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+