சென்னை ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு.. இளைஞர்களுக்கு குட்நியூஸ்
சென்னை: சென்னையில் சுமார் 20,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான அலுவலகத்தை ஆப்பிள் நிறுவனம் அமைத்து செயல்பட போகிறது. இதற்காக போரூர் டிஎல்எஃப் சைபர்சிட்டி வளாகத்தில் உள்ள இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. இனி போருர் டிஎல்எப் அலுவலகம் ஆப்பிளின் உலகளாவிய செயல்பாடுகளை நிர்வகிக்கும் ஒரு முக்கிய மையமாக செயல்பட போகிறது. இதில் அறிய வேண்டிய சூப்பர் விஷயம் என்னவென்றால், சென்னையில் செயல்பட போகும் ஆப்பிளின் கார்ப்பரேட் அலுவலகத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரிய தகுதியான இளைஞர்களைத் தேர்வு செய்யும் பணியை ஆப்பிள் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
ஆப்பிளின் ஐபோன் ஆடம்பரம், பணக்காரர்களின் போன் என்பது பிராண்டாக இங்கே நிறுவனப்பட்டிருக்கிறது. ஆப்பிள் போன் வைத்திருப்பதையே கௌரவம் என்று நினைக்கும் பலர் இருக்கிறார்கள். ஆப்பிள் போன் வைத்திருந்தாலே கெத்து என்ற மனநிலையும் இருக்கிறது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் கம்ப்யூட்டர், லேப்டாப்களுக்கு இந்தியாவில் பெரிய மவுசு உண்டு.

போரூரில் அலுவலகம் திறப்பு
அதேபோல் ஆப்பிளின் சாப்ட்வேர்களுக்கும் இந்தியாவில் எப்போதும் வரவேற்பு உண்டு. இவற்றை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆப்பிள் நிறுவனம் சென்னையில் தொழிற்சாலையை தொடங்கியது. அடுத்ததாக தற்போது ஆப்பிள் நிறுவனம் சென்னையில் கார்ப்பரேட் அலுவலகத்தையும் தொடங்கி உள்ளது. போரூரில் உள்ள டிஎல்எப் வளாகத்தில் தான் சுமார் 20000 சதுர அடி பரப்பளவு இடத்தை குத்தகைக்கு ஆப்பிள் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
எனவே சென்னை போரூரில் செயல்பட போகும் ஆப்பிளின் கார்ப்பரேட் அலுவலகத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரிய தகுதியான இளைஞர்களைத் தேர்வு செய்யும் பணியை ஆப்பிள் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
என்னென்ன வேலைகள் உள்ளன?
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சில முக்கியப் பதவிகள்: ஆங்கிலத்திலும் பதவிகள் அடைப்புக்குறிக்குள் கொடுத்துள்ளோம்.
தொழில்நுட்பம் மற்றும் சில்லறை விற்பனை: டெக்னிக்கல் ஸ்பெஷலிஸ்ட் (Technical Specialist), பிசினஸ் எக்ஸ்பர்ட் (Business Expert).
உற்பத்தி மற்றும் தரம்: மேனுஃபேக்ச்சரிங் குவாலிட்டி-இன்ஜினியர் (Manufacturing Quality-Engineer).
நிர்வாகம்: மேஜர் அக்கவுண்ட் பிசினஸ் மேலாளர் - என்டர்பிரைஸ் (Major Account Business Manager - Enterprise).
சிறப்புப் பணிகள்: சப்ஜெக்ட் மேட்டர் எக்ஸ்பர்ட் (Subject Matter Expert - PVD/Coatings).
இவை தவிர, முழுநேர மற்றும் பகுதிநேரப் பணிகளுக்கும் (Full-time, Part-time and Temporary) ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
தகுதிகள் என்ன தேவை?
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி தகுதிகள் இருந்தாலும், பொதுவான எதிர்பார்ப்புகள் :
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் (Engineering, Business, or Sales) பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
திறமை: சில்லறை விற்பனை, செயல்பாடுகள் (Operations) அல்லது விநியோகச் சங்கிலி (Supply Chain) மேலாண்மை ஆகியவற்றில் போதிய அனுபவம் மற்றும் ஆர்வம் இருக்க வேண்டும்.
தொழில்நுட்ப அறிவு: குறிப்பாக இன்ஜினியரிங் பதவிகளுக்குத் தொழில்நுட்ப ரீதியான ஆழ்ந்த அறிவு மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் திறன் அவசியம் ஆகும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையதளமான jobs.apple.com என்ற பக்கத்திற்குச் செல்லுங்கள்.
தேடல் பகுதியில் (Search) "Chennai" என்று டைப் செய்து தேட வேண்டும்.
அங்கே பட்டியலிடப்பட்டுள்ள வேலைகளில், உங்கள் தகுதிக்கு ஏற்ற ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.
வேலை குறித்த முழு விவரங்களைப் படித்துவிட்டு, அங்கேயே உங்கள் ரெஸியூமை அதாவது பயோ டேட்டாவை தெளிவாக தயார் செய்து பதிவேற்றி விண்ணப்பிக்கலாம்.
ஏன் இது முக்கியமான தருணம்
2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. சென்னையில் தொழிற்சாலையை திறந்தது முதலே அமோகமாக வியாபாரம் ஆப்பிள் நிறுவனத்திற்கு வந்துள்ளது. இந்தியாவில் ஆப்பிள் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தனது ரீடைல் மற்றும் கார்ப்பரேட் கட்டமைப்பை ஆப்பிள் வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.
ஷேர் ஆட்டோவில் போகலாம்
எனவே ஹைதராபாத் மற்றும் பெங்களூருக்கு இணையாகச் சென்னையையும் தனது பிரதான மையமாக ஆப்பிள் நிறுவனம் தற்போது தேர்வு செய்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தில் வேலைக்கு செல்ல இனி பெங்களூர் ஹைதராபாத்திற்கு சென்னை இளைஞர்கள் போக தேவையில்லை. பைக்கை எடுத்தோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ போரூரில் உள்ள டிஎல்எப் வளாகத்திற்கு போய் ஆப்பிள் நிறுவனத்தில் இனி பணியாற்ற முடியும். ஆப்பிளின் இந்த அதிரடி அறிவிப்பு தமிழக இளைஞர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
-
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 12ம் வகுப்பு தகுதிதான்.. ஆரம்பமே 21,500 சம்பளம்.. மதுரையில் பணியிடம் -
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications