10ம் வகுப்பு பாஸோ ஃபெயிலோ! ஊர்க்காவல் படையில் காலிப்பணியிடங்கள்.. சென்னையில்தான் வேலை! ஓகேதானே!
சென்னை: சென்னையில் ஊர்க்காவல் படையில் சேர ஜனவரி 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கீழ்காணும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
* சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விரும்புவோர் 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
* கல்வித்தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள்
* குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும்
* சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்
* குடும்ப அட்டை (Ration Card) வைத்திருக்க வேண்டும்
* தேர்ச்சி செய்யப்படும் ஊர்க்காவல்படையினர்களுக்கு 45 நாட்கள் தினசரி 1மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும், பயிற்சி முடித்த பின்னர் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணிபுரிய அனுப்பப்படுவர்.
* சலுகைகள் : சீருடை, தொப்பி, காலணி ஆகியவை வழங்கப்படும். இரவு ரோந்து பணி, பகல் ரோந்து பணி மற்றும் போக்குவரத்து பணிக்கு ரூ.560/-ம் சிறப்பு படியாக வழங்கப்படும்/பெண்களுக்கு பகல்
ரோந்து பணி மட்டுமே.
* வெகுமதிகள் : சிறப்பாக மெச்சத்தகுந்த வகையில் பணிபுரிவோருக்கு தமிழக முதல்வர் பதக்கம் மற்றும் ஜனாதிபதி பதக்கம் ஆகியவை தகுதி அடிப்படையின் கீழ் வழங்கப்படும்.
மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரியில் 22.01.2024 முதல் இலவசமாக பெற்று பூர்த்தி செய்து 10.02.2024 மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம்.
முகவரி : சென்னை பெருநகர ஊர்க்காவல்படை தலைமை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை, சென்னை - 15. தொடர்பு எண்: 9498135190, 9566776222. சேவை மனம் கொண்ட யாவரும் ஊர்க்காவல்படையில் சேர்ந்து மக்களுக்கு தொண்டு செய்யலாம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊர்க்காவல் படை என்பது இந்தியக் காவல் துறைக்கு துணையாக செயல்படும் தன்னார்வ படையாகும்.
-
EPFO முக்கிய அறிவிப்பு.. இனி முக்கிய சேவைகளுக்கு ஆதார் முக அங்கீகாரம் அவசியம்.. யாருக்கு கட்டாயம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications