தமிழில் எழுத படிக்க தெரியுமா.. அப்ப ரூ 62 ஆயிரம் சம்பளத்தில் வேலை உங்களுக்குத்தான்!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் ரூ 62 ஆயிரம் வரை மாத ஊதியத்தில் வேலை தயாராக இருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்திற்குள்பட்ட சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்கள் நேரடியாக நியமிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இரவு காவலர், அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர் ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தாலே போதும். அது போல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருத்தல் கட்டாயமாகும்.

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். ஈப்பு ஓட்டுநர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஈப்பு ஓட்டுநர் பணிக்கு விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
வாகனம் ஓட்டுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கொரோனா தொற்றினாலோ இதர காரணங்களாலோ பெற்றோர் இருவரையும் இழந்த மகன் அல்லது மகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிப்போர் ஜூலை 1 ஆம் தேதியுடன் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொது பிரிவினராக இருந்தால் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்றபடி அரசு இடஒதுக்கீட்டின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஊதியத்தை எடுத்துக் கொண்டால் இரவு காவலருக்கு ரூ 15,700 முதல் 50 ஆயிரம் வரையும் அலுவலக உதவியாளர் ரூ 15,700- 50 ஆயிரம் வரையும் ஈப்பு ஓட்டுநருக்கு ரூ 19,500 முதல் ரூ 62 ஆயிரம் வரையும் ஊதியமாக வழங்கப்படும்.
இதற்கு தேவையான ஆவணங்களின் நகல்களுடன் https://virudhunagar.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதள முகவரியில் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி
இரவு காவலர் பணிக்கு
ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், சாத்தூர் என்ற முகவரிக்கும்
அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணிக்கு ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், விருதுநகர் என்ற முகவரிக்கும் ஜனவரி 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications