இந்தியன் வங்கியில் வேலை! உள்ளூர் மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை.. 1,500 பணியிடங்கள்.. விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியன் வங்கியில் 1,500 பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 277 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்த இளம் பட்டதாரிகளுக்கு ஏற்ற வேலை வாய்ப்பினை இந்தியன் வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இந்தியன் வங்கி உள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியன் வங்கிக்கு நாடு முழுவதும் வங்கி கிளைகள் உள்ளன. சுமார் 6 ஆயிரம் கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் பல ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

job bank job employment

பணியிடங்கள் விவரம்:

மத்திய அரசின் பொதுத்துறை வங்கி என்பதால் இந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்தியன் வங்கியில் காலியாக உள்ள அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: தமிழகத்தில் மட்டும் 277 காலிப்பணியிடங்கள் உள்ளன. புதுவை -9, தெலுங்கானா 42, கேரளா 44 , ஆந்திர பிரதேசம் 82, கர்நாடகா 42, குஜராத் 35 என 30 மாநிலங்களில் மொத்தம் 1,500 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். 01.04.2021- க்கு முன்பாக டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. உள்ளூர் மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதாவது விண்ணப்பிக்கும் மாநிலத்தின் மொழி தெரிந்து இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்து இருப்பது அவசியம்.

வயது வரம்பு:

20 வயது முதல் 28 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். அதாவது 33 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஓபிசி பிரிவினருக்கு 31 வயது வரை சலுகை உண்டு. பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் எவ்வளவு?

மெட்ரோ/ நகர்புறங்களில் உள்ள வங்கி கிளைகள்: ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும்.
ஊரகம், மற்றும் சிறுநகரங்கள்: ரூ. 12,000 வழங்கப்படும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு முறை:

ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் எழுத்து தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி, வேலூர், கோவை, விருதுநகர், தஞ்சை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும்.

விண்ணப்பிப்பது எப்படி?

அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொண்ட பிறகு தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விண்ணப்ப கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ.175 செலுத்த வேண்டும். https://www.indianbank.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:18.7.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.08.2025 ஆகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.indianbank.in/career/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+