சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. நோ எக்ஸாம்! சூப்பரான சான்ஸ்ங்க.. பட்டைய கிளப்புங்க
சென்னை: மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனத்தில் அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள நிறுவனத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். சம்பளத்தை பொறுத்தவரை ரூ.11,040 முதல் 17,500 வரை வழங்கப்படும்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பெல் நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. அந்த வகையில் சென்னை நந்தம்பாக்கத்திலும் இந்த நிறுவனத்தின் கிளை உள்ளது.

பெல் நிறுவனத்தை பொறுத்தவரை அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில், தற்போது 99 பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு ஆகியவை பற்றி பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* இன்ஜினியரிங் அப்ரெண்டீஸ் - 64
* ஐ.டி.ஐ (ITI) அப்ரெண்டீஸ் - 15
* டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரெண்டீஸ் - 10
* பட்டப்படிப்பு (Non-Engineering) அப்ரெண்டீஸ் - 10 என மொத்தம் 99 பயிற்சி பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
* கல்வித் தகுதியை பொறுத்தவரை பணிக்கு ஏற்ப மாறுபடும். அதாவது விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பின்வரும் தகுதிகளை ஏதேனும் ஒன்றை பெற்றிருக்க வேண்டும்.
* பி.இ / பி.டெக், டிப்ளமோ ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
* 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படுவர்கள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.
சம்பளம் எவ்வளவு?
* சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.11,040 முதல் 17,500 வரை வழங்கப்படும். அரசு விதிமுறைகளை பின்பற்றி எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு முறை:
இந்த பணியிடத்திற்கு எழுத்து தேர்வு எதுவும் கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரடியாகத் தேர்வு நடைபெறும் இடத்திற்கு செல்லலாம். அதாவது வாக் இன் இண்டர்வியூக்கு செல்லலாம் தேர்வர்கள் தங்கள் கல்வி சான்றிதழ்களை எடுத்து செல்வது அவசியம். மார்க் மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
* நேர்காணல் நடைபெறும் விவரம் நாள்: 2026, பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 7 வரை.
* நேர்காணல் நடைபெறும் இடம்: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், நந்தம்பாக்கம், சென்னை - 600 089.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications