TNVAS தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில்.. அட்டகாசமான வேலை ரெடியா இருக்கு... மிஸ் பண்ணாதீங்க
சென்னை: தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TNVAS எனப்படும் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் (assistant professor) பணியிடங்களை நிரப்ப அந்த பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முந்தைய ஆண்டுகளில் நிரப்பப்படாமல் இருந்த மூன்று பணியிடங்கள் உட்பட மொத்தம் 49 இடங்களுக்குத் தகுதியான ஆட்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்த காலியிடங்கள் - 49
காலி இடங்கள் குறித்து விரிவான தகவலுக்கு http://tanuvas.ac.in/pdf/recruit/notification_ap_2021.pdf
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தது முதுகலை படித்து இருக்க வேண்டும்.
மதிப்பீட்டு முறை http://tanuvas.ac.in/pdf/recruit/acm_ap_2021.pdf
விண்ணப்பிக்கும் முறை: தேவையான அனைத்து ஆவணங்களை இணைத்துப் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பத்தைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் - பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் ரூ.500. இதர பிரிவினர்களுக்கு ரூ.1000.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி - இந்த விண்ணப்பங்கள் 26 ஜூலை 2021 மாலை 5.00 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
அனைத்து தகவலும் உள்ள விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும் என்றும் தகுதியுள்ள நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்துக் கூடுதல் விவரங்களை http://tanuvas.ac.in/recruitment_ap_2021.html இல் தெரிந்து கொள்ளலாம்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications