‛‛சாப்ட்வேர் இன்ஜினியர் பணி’’.. டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவரா நீங்கள்? அழைக்கும் பிரபல நிறுவனம்
சென்னை: பிரபல ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் NetAPP. unified data storage, integrated data services மற்றும் cloud operations (CloudOps) solutions உள்ளிட்ட சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்தியாவில் பெங்களூரில் NetAPP நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு காலியாக உள்ள சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி NetAPP நிறுவனத்துக்கு சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டம். இல்லாவிட்டால் இன்ஜினியரிங் பிரிவில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் அல்லது இந்த துறைகள் சார்ந்த படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
மேலும் NodeJS, java/scala/Go உள்ளிட்டவற்றில் ப்ரோகிங்கின் ஸ்கில்ஸ் தெரிந்திருக்க வேண்டும். அதோடு OOPS பற்றிய புரிதல் இருப்பதோடு, Python/Shell Script தெரிந்திருக்க வேண்டும். REST APIs-ல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும், லினக்ஸ் பிளாட்பார்மில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். டேட்டா ஸ்ட்ரெக்சர்ஸ் மற்றும் ஆபரேட்டிங் சிஸ்டம்ஸின் அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும்.
புதிய தொழில்நுட்பங்களை கற்க ஆர்வம் இருப்பதோடு, ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதுதவிர Presentation ஸ்கில்ஸ்சும் இருக்க வேண்டும். மேலும் Docker, Kubernetes மற்றும் Cloud Technologies பற்றி தெரிந்திருந்தால் விண்ணப்பம் செய்வோருக்கு பிளஸ் பாயிண்டாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக NetAPP நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான இறுதி தேதியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்படுவார்கள்.
பணி குறித்த அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications