ரெடியா? கைநிறைய சம்பளம்.. நர்சிங் முடித்தவரா நீங்கள்.. பெங்களூர் நிமான்ஸ்-ல் அசத்தலான வேலை
பெங்களூர்: பெங்களூரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நிமான்ஸ் மருத்துவமனையில் ஏராளமான நர்சிங் ஆபிசர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பிஎஸ்சி நர்சிங் மற்றும் அதுசார்ந்த படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
பெங்களூரில் நிமான்ஸ் (NIMHANS) எனும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த் அன்ட் நியூரோ சயின்சஸ் (National Institute Of Mental Health and Neuro Sciences) மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனை என்பது மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: பெங்களூர் நிமான்ஸ் மருத்துவமனையில் தற்போது நர்சிங் ஆபிசர் என்ற பொறுப்புக்கு 161 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இடஒதுக்கீடு அடிப்படையில் எஸ்சி 26 பேர், எஸ்டி 10 பேர், ஓபிசி 39 பேர், யூஆர் 70 பேர், இடபிள்யூஎஸ் 16 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஒபிசி என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 முதல் 15 வயது வரையும் வயது தளர்வு உண்டு. வயது வரம்பு என்பது 18.11.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
கல்வி தகுதி: இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி, பல்கலைக்கழங்களில் பிஎஸ்சி (Hon) நர்சிங் அல்லது பிஎஸ்சி நர்சிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஐஎன்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரி, பல்கலைகழக்கழங்களில் பிஎஸ்சி (போஸ்ட் சர்ட்டிபிகேட்)/ போஸ்ட் பேசிக் பிஎஸ்சி நர்சிங் படிப்பை முடித்துமாநிலம்/இந்தியன் நர்சிங் கவுன்சிலில் நர்சஸ் மற்றுமு் மிட்வைப்-ஆக பதிவு செய்திருக்க வேண்டும்.

மாதசம்பளம்: இந்த பணிக்கு குறைந்தபட்சமாக ரூ.9,300 முதல் அதிகபட்சமாக ரூ.34,800 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.nimhans.ac.in எனும் இணையதளம் மூலம் நவம்பர் மாதம் 18 ம் தேதி மாலை 4.30 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எலிஜிபிலிட்டி தேர்வுக்கு பிறகு பணியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஆன்லைனிலேயே தமிழ் கற்கலாம்.. வெளிமாநிலம் - வெளிநாட்டில் உள்ளோருக்கு சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications