பொதுத்துறை வங்கிகளில் வேலை வேண்டுமா? 10,729 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு.. விண்ணிபிப்பது எப்படி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிபிஎஸ் என்று அழைக்கப்படும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவன வாரியம் 10,729 குரூப் ஏ மற்றும் பி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் எஸ்பிஐ தவிர மற்ற அனைத்து பொதுத் துறை வங்கிகளிலும் உள்ள காலியிடங்கள் ஐபிபிஎஸ் என்று அழைக்கப்படும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவன வாரியத்தின் தேர்வுகள் மூலமே நிரப்பப்படும்.

Bank jobs applications is now open for 10729 group a and group b officers

இந்நிலையில் தற்போது 43 பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. குரூப் ஏ மற்றும் குரூப் பி என மொத்தம் 10,729 பணியிடங்களை நிரம்ப இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள் - 10729

கல்வித் தகுதி: அனைத்து இளங்கலை பட்டதாரிகளுக்கும் விண்ணிப்பிக்காலம். சில குறிப்பிட்ட பணியிடங்களுக்கு அது சம்பந்தப்பட்ட பிரிவில் BE அல்லது BTech முடித்தவர்கள், MSC கணினி அறிவியல், MCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு: Officer Scale- III (Senior Manager) 21 முதல் 40 வயது

Officer Scale- II (Manager)- 21 முதல் 32 வயது

Officer Scale- I (Assistant Manager)- 18 முதல் 30 வயது

Office Assistant (Multipurpose) -18 முதல் 28 வயது

மத்திய அரசின் விதிகளின்படி சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை - 3 வகையான எழுத்துத்தேர்வு

விண்ணப்பக் கட்டணம் - பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் Officers (Scale-I, II & III) பணியிடங்களுக்கு ரூ.175. இதர பிரிவினர்களுக்கு ரூ.850.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி - ஜூன் 28, 2021

இது குறித்துக் கூடுதல் விவரங்களை https://www.ibps.in/wp-content/uploads/Advt-_CRP-RRB-X_final_1912.pdf இல் தெரிந்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+