பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை.. பல ஆயிரங்களில் சம்பளம் கிடைக்கும்! தட்டி தூக்குங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 253 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுத்துறை வங்கி என்பதால், இந்த வங்கி பணியில் சேருபவர்களுக்கு பல ஆயிரங்களில் சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவை கிடைக்கும். இந்த தேர்வு அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.

சென்னை: நாட்டில் உள்ள முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் பரோடா உள்ளது. எஸ்.பி.ஐ வங்கிக்கு அடுத்தபடியாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகவும் பேங்க் ஆப் பரோடா உள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த வங்கி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் தற்போது காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Job jobs bank of baroda Employment

காலிப்பணியிடங்கள்:

உதவி துணைத் தலைவர் - எம்.எஸ்.எம்.இ (MSME) ரிலேஷன்ஷிப் - 14
துணை மேலாளர் - எம்.எஸ்.எம்.இ - 62
உதவி மேலாளர் - எம்.எஸ்.எம்.இ விற்பனை பிரிவு - 177
என மொத்தம் 253 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

உதவி துணைத்தலைவர் (Assistant Vice President 1) பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக எம்பிஏ / மார்க்கெட்டிங் பிரிவில் பிஜிடிஎம் அல்லது ஃபைனான்ஸ் பிரிவில் படித்திருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் அவசியம். எம்.எஸ்.எம்.இ பிரிவில் அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

துணை மேலாளர் பணிக்கு டிகிரியுடன் எம்பிஏ / பிஜிடிஎம் படித்திருக்க வேண்டும். வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும்.

உதவி மேலாளர் - எம்.எஸ்.எம்.இ விற்பனை பணியிடத்திற்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிஜிடிஎம் / நிதி பிரிவில் எம்பிஏ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயது வரம்பு:

உதவி துணைத் தலைவர் - எம்.எஸ்.எம்.இ (MSME) ரிலேஷன்ஷிப் - 26 வயது முதல் 36 வயதுக்குள் விண்ணப்பிக்கலாம்.
துணை மேலாளர் - எம்.எஸ்.எம்.இ - 24 வயது முதல் 34 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
உதவி மேலாளர் - எம்.எஸ்.எம்.இ விற்பனை பிரிவு - 22 வயது முதல் 32 வயதுக்குள் விண்ணப்பிக்கலாம்.

வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள், எஸ்.சி./எஸ்.டி. மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறையைப் பொறுத்தவரை விண்ணப்பங்கள் பரிசீலனை, ஆன்லைன் தேர்வு, உளவியல் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

ஆர்வம் உள்ளவர்களுக்கு, வங்கி சார்ந்த துறைகளில் பணியாற்றுவோருக்கு இது அருமையான வேலை வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. எனவே, அத்துறையில் பணியாற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பை படித்து உறுதி செய்த பிறகு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 26.02.2026 கடைசி நாளாகும்.

விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். பெண்கள் / எஸ்.சி. / எஸ்.டி. / மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.175 கட்டணம் ஆகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://bankofbaroda.bank.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2026/26-02/Advertisement-MSME-Contractual-06-02-2026-05-21.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+