பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை.. 10ம் வகுப்பு முடிச்சவங்க அப்ளை பண்ணலாம்.. 2 நாள் தான் இருக்கு
சென்னை: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் ஆபிஸ் அசிஸ்டண்ட் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. மொத்தம் 500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் இதற்கு விண்ணபிக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து விடுங்கள். தமிழ் மொழி தெரிந்து இருப்பது அவசியம் ஆகும்.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பேங்க் ஆஃப் பரோடா. மத்திய நிதி அமைச்சகங்களின் கீழ் வரும் இந்த வங்கியில் கை நிறைய சம்பளம், மாதம் 6 நாட்கள் விடுமுறைகள், பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. இதனால் இந்த வங்கிகளில் எப்படியாவது படித்து வேலையில் சென்றுவிட வேண்டும் என இளைஞர்கள், இளம்பெண்கள் போட்டிப் பொட்டுக்கொண்டு படித்து தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள்.

பேங்க் ஆஃப் பரோடா
இந்த நிலையில் தான், போட்டித் தேர்வர்களுக்கு ஆஃபர் வழங்கும் விதமாக, தற்போது வரிசையாக வங்கிகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த மாத தொடக்கத்தில் பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. அலுவலக உதவியாளர் 500 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்க முடியும்? கல்வித்தகுதி என்ன என்பனவற்றை இங்கு பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 24 காலிப்பணியிடங்களும், கேரளாவில் 19 பணியிடங்களும், ஆந்திர பிரதேசத்தில் 22 பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். விண்ணப்பிக்க மாநிலங்கள் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக தமிழகம் என்றால் தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியை பேசவும் எழுதவும் தெரிந்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு
இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி / எஸ்டி விண்ணப்பதாரர்களை பொறுத்தவரை 5 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வுகள் அளிக்கப்படும். பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை:
ஆன்லைன் டெஸ்ட், உள்ளூர் மொழித்திறன் தேர்வு ஆகியவை அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100 கட்டணம் ஆகும். ஆன்லைன் வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 23.05.2025 கடைசி நாளாகும். அதாவது நாளை மறுநாள் தான் கடைசி நாள் ஆகும்.
தேர்வு மையங்கள்
தேர்வு மையங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும். தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம், வேலூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2025/25-04/Advertisment-02-36.pdf.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications