"கை வெச்சா டிரஸ்ஸ கலைச்சிடுவேன்" ஜெய்ப்பூர் வீட்டு படுக்கையறையில் நகையுடன் மிரட்டிய பெண்! அலறிய ஓனர்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த சம்பவம் ஒன்று, வீடியோவாக இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. ஒரு திருட்டு பெண்ணுக்கு இவ்வளவு துணிச்சலா? என்று காண்போர்கள் கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.. சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது போலீசார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்றாலும், சிசிடிவி காட்சி தந்த அதிர்ச்சி இன்னமும் அடங்கவில்லை.
ஜெய்ப்பூரில் முஹானா என்ற குடியிருப்புப் பகுதி உள்ளது.. இங்கு சந்தீப் சோனி என்பவர் வசித்து வருகிறார்.. இவரது வீட்டில் சில நாட்களுக்கு முன்பு திடீரென பீரோவில் இருந்த பணமும், சில நகைகளும் காணாமல் போயுள்ளது.. இதை யார் திருடினார்கள் என்று சந்தீப் சோனிக்கு தெரியவில்லை.. இதனால் குழம்பி போன அவர், எப்படியாவது திருடனை கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

ஜெய்ப்பூர் நகைகள் திருட்டு
இதற்காக தன்னுடைய வீட்டின் படுக்கையறையில் ரகசியமாக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தினார். மேலும் தன்னுடைய செல்போனிலும், சிசிடிவி கேமராவை இணைத்து பொருத்தி வைத்திருந்தார்.. வெளியில் சென்றாலும், தன்னுடைய செல்போனிலேயே வீட்டில் நடப்பதை கண்காணிக்கவும் முடியும்.. அதனால் எப்படியும் திருடன், இந்த கேமராவில் பிடிபடுவான் என்று காத்திருந்தார்.
நேற்று முன்தினம் மதியம் சந்தீப் சோனி தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்தார்... வெளியில் சென்றாலும், தன்னுடைய வீட்டில் என்ன நடக்கிறது என்பதை, செல்போனிலேயே கண்காணித்துக் கொண்டிருந்தார். அப்போது செல்போனில் பார்த்த காட்சி, சந்தீப் சோனிக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது..
கேமராவில் பார்த்த அதிர்ச்சி காட்சி
ஒரு பெண் கேஷூவலாக படுக்கையறைக்குள் நுழைந்து, பீரோவைத் திறந்து எதையோ தேடி கொண்டிருந்தார்.. பிறகு ஒரு சின்ன நகைப் பெட்டியை எடுத்து படுக்கையின் மீது வைத்து, அதற்குள் இருந்த நகைகளை ஒவ்வொன்றாக எடுத்து, தான் கொண்டு வந்த பையில் எடுத்து வைத்துக் கொண்டார்.
இதையெல்லாம் செல்போனில் பார்த்து பதறிப்போன சந்தீப் சோனி, உடனே தனது பக்கத்து வீட்டுக்காரருக்கு போனை போட்டு விஷயத்தை சொன்னார். அந்த பெண் வீட்டிற்குள் இருக்கும்போதே வீட்டின் வெளிப்பக்க கதவை பூட்டிவிடுமாறு சொன்னார்.
உடனே பக்கத்து வீட்டுக்காரரும், சந்தீப் சோனியின் வீட்டின் வெளிக்கதவை பூட்டி அந்தப் பெண்ணை வீட்டிற்குள்ளேயே சிறைவைத்தார். அதற்குள் சந்தீப் சோனியும் விரைந்து வீட்டிற்கு வந்தார்... பிறகு வீட்டின் கதவை திறந்து, வசமாக மாட்டிக்கொண்ட அந்த பெண்ணிடம், ஏன் வீட்டிற்குள் வந்தாய் என்று கேட்டார்.
டிரஸ்ஸை கழட்டி புகார் தருவேன்
உடனே அந்த பெண், அங்கிருந்து தப்பிப்பதற்காக திடீரென ஒரு ஐடியாவை கையிலெடுத்தார்.. சந்தீப் சோனியிடம், என் துணியெல்லாம் கிழிச்சிட்டு, உன் மேல பாலியல் புகார் தரப்போறேன், போலீஸ் வர்றத்துக்குள்ளே என் டிரஸை கழற்றிடுவேன், அப்புறம் போலீஸ் வந்து உன்னை பிடிச்சிடும்" என்று கத்திகூச்சலிட்டு பயமுறுத்தினார்.
ஆனால், சந்தீப் சோனியும், பக்கத்து வீட்டுக்காரரும் அந்தப் பெண்ணின் இந்த மிரட்டலுக்கு துளியும் பயப்படவில்லை.. ஆனால், அந்த பெண்ணிடமிருந்து சற்று தள்ளி நின்றுகொண்டனர். அந்தப் பெண் கத்தி கூச்சலிடுவதையும், இப்படி மிரட்டுவதையும் செல்போனில் வீடியோவாகவும் ரெக்கார்டு செய்து கொண்டனர்.
சுற்றி வளைக்கப்பட்ட பெண்
இதனிடையே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக உள்ளூர் போலீசுக்கு தகவல் தந்தார்கள்.. விரைந்து வந்த முஹானா பகுதி போலீஸார், ஆக்ரோஷமாக மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை சுற்றி வளைத்தனர்.. சந்தீப் சோனியும், தன்னிடமிருந்த சிசிடிவி காட்சிகள், செல்போன் வீடியோ மிரட்டல் உள்ளிட்டவற்றை ஆதாரமாக போலீசாரிடம் வழங்கினார்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் போலீஸார் அந்தப் பெண் மீது அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. வீட்டிற்குள் புகுந்து திருடியதுடன், தட்டிக்கேட்ட வீட்டின் உரிமையாளருக்கே மிரட்டல் விடுத்த இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..!!












Click it and Unblock the Notifications