முதலாளி வீட்டில் வேலைக்கார விமலாவுக்கு வந்த சபலம்.. டேராடூனில் ஓராண்டு கழித்து உடைந்த பகீர் உண்மை
சென்னை: ஆசைக்காக ஒரு தவறை செய்துவிட்டு, அந்த ஆசையினாலேயே சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொண்டு விழித்துள்ளார் ஒரு ரீல்ஸ் பெண்.. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த இந்த 10 லட்ச ரூபாய் மதிப்பிலான திருட்டு சம்பவம் இப்போது, இணையத்திலும் வெளியாகி பரபரப்பை தந்து வருகிறது.. என்ன நடந்தது? யாரிந்த ரீல்ஸ் பெண்?
டேராடூனின் ஐடி பார்க் பகுதியில் உள்ளது சிக்கா கிமயா கிரீன்ஸ் என்ற அப்பார்ட்மென்ட்.. இங்கு வசித்து வருபவர் நிதிஷா வாட்ஸ். இவர் 1 வருடத்திற்கு முன்பு ஜாகன் பகுதியில் உள்ள டூன் ரிபப்ளிக் அப்பார்ட்மென்ட்டில் வசித்து வந்தார்.

வேலைக்கார விமலாவுக்கு வந்த சபலம்
அப்போது அவரது வீட்டில் 2 வைர மோதிரங்கள், 1 தங்கச் சங்கிலி, வைரங்கள் பதிக்கப்பட்ட ஹார்ட் வடிவ பதக்கம், ஒரு வைர நெக்லஸ் & தங்க லாக்கெட் உள்ளிட்ட நிறைய மதிப்புமிக்க நகைகள் திடீரென மாயமாகின. இதனால் அதிர்ச்சியடைந்த நிதிஷா, தனது வீட்டில் வேலை செய்து வந்த விமலா தேவி என்ற பெண் மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரித்தார்.
ஆனால் விமலா தேவி தனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லி விட்டார்.. அதுவும் இல்லாமல் நிதிஷாவிடம், "என் மேல சந்தேகப்பட்டுட்டீங்களே? என்னை எப்படி நீங்கள் சந்தேகப்படலாம், நான் வேண்டுமானால் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் தருகிறேன், அவர்களே வந்து குற்றவாளியை தேடி பிடிக்கட்டும்" என்று சவால் விட்டு பேசினார்..
விமலாதேவி இப்படி பேசவும், நிதிஷாவுக்கு இருந்த சந்தேகம் விலகியது.. அத்துடன தன்னுடைய நகைகள் எங்காவது தவறி விழுந்திருக்கலாம் அல்லது வேறு யாராவது எடுத்திருக்கலாம் என்று நிதிஷா நினைத்தார்..
நிதிஷாவின் தோழி
இதனிடையே, கடந்த மாதம் ஜூன் 29ம் தேதி காலை நிதிஷாவின் தோழி ஒருவர் சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் பார்த்து கொண்டிருந்தார்.. அப்போது, பணிப்பெண் விமலா தேவியின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.. அத்துடன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும், விமலா தேவி ரீல்ஸ் வீடியோவை ஷேர் செய்திருந்தார்.. ஆனால் அந்த ரீல்ஸ் வீடியோவில், நிதிஷா வீட்டில் திருடிய நகைகளை அணிந்திருந்ததை கண்டு நிதிஷாவின் தோழி அதிர்ந்து போனார்.
உடனே நிதிஷாவுக்கு அந்த வீடியோ, போட்டோக்களை எல்லாம் அனுப்பினார்.. அதை உற்றுப்பார்த்த நிதிஷா, விமலா தேவி அணிந்திருப்பது ஒரு வருடத்திற்கு முன்பு தனது வீட்டில் காணாமல் போன அதே வைர நெக்லஸ் மற்றும் தங்க நகைகள் தான் என்பதையறிந்து நிலைகுலைந்து போனார்.. உடனே இதையே ஆதாரமாக வைத்து நிதிஷா வாட்ஸ் ராஜ்பூர் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
ரூ.10 லட்சம் நகை
ஜூலை 1ம் தேதி போலீசார் இந்தத் திருட்டு குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். பிறகு நேற்றைய தினம், டேராடூனின் ஜோஹ்ரி சாலையில் பதுங்கியிருந்த விமலா தேவியை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய சோதனையில், திருடப்பட்ட வைர நெக்லஸ், தங்க லாக்கெட், 2 தங்க மோதிரங்கள், தங்கப் பதக்கம், செல்போன் என அனைத்தையும் அதிகாரிகள் மீட்டனர். கைப்பற்றப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு 10 லட்ச ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரீல்ஸ் வீடியோ
பிறகு விமலா தேவியிடம் விசாரணையை ஆரம்பித்தனர்.. எடுத்ததுமே தான் திருடியதை ஒப்புக் கொள்ளவில்லையாம் விமலா தேவி... ஆனால், போலீசார் தங்கள் பாணியில் விசாரித்ததுமே அனைத்தையுமே ஒப்புக்கொண்டுள்ளார்.
"உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியைச் சேர்ந்தவள் நான்.. ஜாகன் பகுதியில் தங்கி நிதிஷாவின் வீட்டில் வேலை செய்து வந்தேன்.. அங்கு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த காஸ்ட்லி நகைகளைத் கவனித்தபடி இருந்தேன்.. ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாதபோது, அந்த நகைகளை திருடிவிட்டேன். திருடிய நகைகளை யாரிடமும் காட்டமால் பத்திரமாக மறைத்து வைத்துள்ளேன். ரீல்ஸ்க்காக எடுத்து அணிந்தபோதுதான் மாட்டிக்கொண்டேன்" என்று வாக்குமூலம் தந்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் விமலா தேவியை கைது செய்துள்ளனர்.. ரீல்ஸ் மோகத்தால், திருட்டு நகையுடன் சிக்கி உள்ள விமலா தேவி, இப்போது ஜெயிலில் உள்ளார்..!!!












Click it and Unblock the Notifications