பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் மேனேஜர் பணியிடங்கள்.. மாதம் ரூ.1.20 சம்பளம்! விட்றாதீங்க
சென்னை: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் எஸ்.ஓ எனப்படும் சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடாவில் தலைமை மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சம்பளத்தை பொறுத்தவரை 1.20 லட்சம் வரை வழங்கப்படும்.
நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியாக இருப்பது பேங்க் ஆஃப் பரோடா வங்கி தான். பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இது, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு அடுத்தப்படியாக உள்ளது. குஜராத் வதோராவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கியானது நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கியில் ஏற்படும் காலியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகிறது. அதன்படி தற்போது சிஓ எனப்படும் சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* தலைமை மேலாளர் - பல்வேறு பரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.
* சீனியர் (மூத்த) மேலாளர் - பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.
* சட்ட அதிகாரிகள் - 02 பணியிடங்கள்
* மேலாளர் - பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் என மொத்தம் 115 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி
டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். பி.இ, பி.டெக் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதியானது துறை சார்ந்த பிரிவிற்கு ஏற்ப மாறுபடும். தேர்வு அறிவிப்பில் ஒருமுறை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை பதவிகளுக்கு ஏற்ப மாறுபடும்.
* தலைமை மேலாளர் பதவிக்கு 28 வயது முதல் 42 வயது உடையவர்கள் வரை விண்ணப்பிக்க முடியும்.
* சீனியர் (மூத்த) மேலாளர் பதவிக்கு 28 - 37 வயது உடையவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
* அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும். கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் ஒருமுறை உறுதி செய்துகொண்டு விண்ணப்பிக்கவும்.
சம்பளம் எவ்வளவு:
* மேலாளர் (Scale-II) - Rs.64,820 - 93,960/-
* சீனியர் (மூத்த) மேலாளர் (Scale-III) - Rs.85,920 - 1,05,280/-
* தலைமை மேலாளர் (Scale-IV) - Rs.1,02,300 - 1,20,940/-
தேர்வு முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://bankofindia.bank.in/ என்ற ஆன்லைன் இணையதளம் வழியாக தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
* விண்ணப்ப கட்டணம் ரூ.850 ஆகும். ST/SC/முன்னாள்/PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.175 விண்ணப்பக் கட்டணம் ஆகும்.
* விண்ணப்ப பதிவு தொடங்கும் தேதி 17.11.2025 ஆகும்.
* விண்ணபிக்க கால அவகாசம் முடியும் தேதி 30.11.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://drive.google.com/file/d/1-NO5mlgjhfM6mkM4dDo-kQKmtlS3NLVq/view
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications