பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 400 பணியிடங்கள்.. சென்னையிலேயே வேலை பார்க்க சான்ஸ்.. ரெடியா!
சென்னை: பேங்க் ஆப் இந்தியாவில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 400 பணியிடங்கள் நிரப்பபடுகிறது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு கட்டாயம் உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும். இது தொடர்பான முழு விவரங்களை இங்கு பார்க்கலாம்.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பேங்க் ஆஃப் இந்தியா. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த வங்கியில் நாடு முழுவதும் 3,400 கிளைகள் உள்ளன. வெளிநாட்டிலும் 29 கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பேங்க் ஆஃப் இந்தியாவில் 400 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: நாடு முழுவதும் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளைகளில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். மொத்தம் 400 அப்ரண்டீஸ் டிரையினிங் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழகத்தில் சென்னையில் ஒரு பணியிடம் உள்பட மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இவ்வாறு மாநில வாரியாக 400 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி: கல்வித் தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்து இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் பட்டப்படிப்பினை 01.04.2021 மற்றும் 01.01.2025 ஆகிய தேதிகளுக்கு இடையில் முடித்தவராக இருத்தல் வேண்டும். இவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 01.01.2025 அன்று தேதிப்படி, 20 வயது முதல் 28 வயதுக்கு இடைப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பில் அரசு விதிகளின் படி தளர்வுகள் உண்டு. எஸ் சி / எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு. மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு: அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மெட்ரோ நகரங்கள் என்றால் ரூ.15 ஆயிரம் மாதம் சம்பளம் வழங்கப்படும். நகரங்கள் என்றால் மாதம் ரூ.12 ஆயிரமும், கிராமப்புறம் மற்றும் சிறு நகரங்கள் என்றால் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை: முதலில் ஆன்லைன் தேர்வு நடைபெறும். இதன் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும். பின்னர் உள்ளூர் மொழிகளில் தேர்வு நடைபெறும். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் பணியிடங்கள் இருப்பின் தமிழ் மொழியில் தேர்வு நடைபெறும். இதில் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு அறிவிப்பினை நன்கு படித்துக்கொண்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்தம் அடிப்படையிலானது. ஒரு ஆண்டுக்கு மட்டுமே விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை பொது பிரிவினர்கள் ரூ.800 செலுத்த வேண்டும். எஸ் சி / எஸ்டி பிரிவினர் என்றால் ரூ.600 கட்டணம் செலுத்தினால் போதும். மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் ரூ.400 செலுத்தினால் போதும். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள் 1.03.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 15.03.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.iob.in/Careers
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications