மாத ஊதியம் ரூ. 30,000 முதல் ரூ. 55,000 வரை... பெல் நிறுவனத்தில் சூப்பர் வேலை.. அசத்தலான வாய்ப்பு
பெங்களூர்: பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் மாத சம்பளம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரை ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த வேலைவாய்ப்பு பற்றிய முக்கிய அறிவிப்பின் விபரங்கள் வருமாறு:
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ((BEL or Bharat Electronics Limited) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல இடங்களில் இயங்கி வருகிறது. இந்தியாவின் பல்வேறு துறைகளுக்கு தேவையான எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்பட மொத்தம் 250க்கும் அதிகமான பொருட்களை இந்த பெல் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது. இந்த நிறுவனத்துக்கு தேவையான ஆட்கள் அவ்வப்போது தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு விபரம் வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பின்படி பெல் நிறுவனத்தில் மொத்தம் 471 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் புராஜெக்ட் என்ஜினீயர் -I பணிக்கு 327 பேர், டிரெய்னி என்ஜினீயர் பணிக்கு 101 பேர் என மொத்தம் 428 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் புராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். டிரெய்னி என்ஜினீயர் பணிக்கு விண்பண்பம் செய்வோர் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், பிடபிள்யூபிடி, மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் சலுகைகள் உண்டு.
விண்ணப்பம் செய்ய விரும்புவோர் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது என்ஜினீயரிங் கல்லூரியில் சம்பந்தப்பட்ட பிஇ, பிடெக் படிப்பை எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ்ட், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளை 55 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
இது ஒப்பந்த பணி என்பதால் புராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு முதல் ஆண்டு ரூ.40,000, 2வது ஆண்டு ரூ.45,000, 3வது ஆண்டு ரூ.50,000, 4வது ஆண்டு ரூ.55,000 ஊதியமாக வழங்கப்படும். ப்ராஜெக்ட் என்ஜினீயர் பதவியை பொறுத்தமட்டில் 3 ஆண்டு ஒப்பந்த பணி வழங்கப்படும். தேவையெனில் 4வது ஆண்டு தொடரப்படும். அதேபால் டிரெய்னி பணி 3 ஆண்டுக்கு உரியது. இதில் முதல் ஆண்டு ரூ.30 ஆயிரம், 2வது ஆண்டு ரூ.35 ஆயிரம், 3வது ஆண்டு ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மே மாதம் 18 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். www.bel-india.in எனும் இணையதளம் மூலம் மே 18 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications