ரெடியா? ரூ.85,570 வரை சம்பளம்.. டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.. அழைக்கும் பிஇஎம்எல்..

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் பிஇஎம்எல் நிறுவனத்தில் டிப்ளேமா, ஐடிஐ முடித்தவர்களுக்கான சூப்பர் வேலை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.16,900 முதல் அதிகபட்சமாக ரூ.85,570 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் பிஇஎம்எல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மொத்தம் 6 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன் விபரம் வருமாறு:

BEML recruitment 2023 for Diploma Trainee and ITI Trainee

காலியிடங்கள்: டிப்ளேமா டிரெய்னி (மெக்கானிக்கல்) பணிக்கு மொத்தம் 52 பேர், டிப்ளமோ டிரெய்னி (எலக்ட்ரிக்கல்) பணிக்கு 27 பேர், டிப்ளமோ டிரெய்னி (சிவில்): இந்த பணிக்கு 7 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஐடிஐ டிரெய்னி (மெஷினிஸ்ட்) பணிக்கு 16 பேர், ஐடிஐ டிரெய்னி (ட்டனர்) பணிக்கு 16 பேர், ஸ்டாப் நர்ஸ் பணிக்கு ஒருவர் என மொத்தம் 105 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு: டிப்ளேமா டிரெய்னி, ஐடிஐ டிரெய்னி பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 29 வயதுக்குள் இருக்க வேண்டும். ஸ்டாப் நர்ஸ் பணியை விரும்புவோர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதோடு ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும் தளர்வு வழங்கப்படும்.

மாதசம்பளம்: டிப்ளமோ டிரெய்னி பணிக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.29,310 சம்பளம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.85,570 வரை மாதசம்பளம் வழங்கப்படும். ஐடிஐ டிரெய்னி பணிக்கு ரூ.16,900 முதல் ரூ.60,650 வரையும், ஸ்டாப் நர்ஸ் பணிக்கு ரூ.18,780 முதல் ரூ.67,390 வரையும் சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: டிப்ளமோ டிரெய்னி (மெக்கானிக்கல்) பணிக்கு டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினியரிங், டிப்ளமோ டிரெய்னி (எலக்ட்ரிக்கல்) பணிக்கு டிப்ளமோ எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங், டிப்ளமோ டிரெய்னி (சிவில்) பணிக்கு டிப்ளமோ சிவில் என்ஜினியரிங் படிப்பை 60 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும்.

ஐடிஐ டிரெய்னி (மெஷினிஸ்ட்) பணிக்கு ஐடிஐயில் மெஷினிஸ்ட் டிரேட் (Machinsit Trade), ஐடிஐ டிரெய்னி (ட்டனர்) பணிக்கு ஐடிஐயில் ட்டனர் டிரேட் (Turner Trade), ஸ்டாப் நர்ஸ் பணிக்கு பிஎஸ்சி நர்சிங் அல்லது எஸ்எஸ்எல்சி முடித்து 3 ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்பை முடித்திருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் bemlindia.in இணையதளம் மூலம் அக்டோபர் 18 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் பிடபிள்யூடி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+