கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை.. ஐடிஐ முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. விட்றாதீங்க
சென்னை: கல்பாக்கம் இந்திய அணுசக்தி மின்கழகம் பாவிணியில் ஐடிஐ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 50 டிரேட் அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு எப்படி அப்ளை செய்வது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
நாட்டின் அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் பொது துறை நிறுவனம் பாவிணி(BHAVINI). இது கல்பாக்கம் இந்திய அணுசக்தி மின்கழகம் வளாகத்தில் அமைந்துள்ளது. நாட்டிற்கு தேவையான மின் உற்பத்தியில் இந்த நிறுவனத்தின் பங்கும் அளப்பரியது. நாட்டின் நீண்டகால அணுசக்தி திட்டத்தில் முக்கிய பங்காற்றும் நிறுவனமாக பாவிணி விளங்கி வருகிறது.

பணியிடங்கள் விவரம்:
இந்த நிலையில் பாவிணி இந்திய அணுசக்தி மின் கழகத்தில் 50 அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஃபிட்டர் (10), மெஷினிஸ்ட் (01), டிஜிட்டல் ஃபோட்டோகிராஃபர்/ஃபோட்டோகிராஃபர் (01), மெயின்டெனன்ஸ் மெக்கானிக் (கெமிக்கல் பிளாண்ட்) / ஃபிட்டர் (10),
கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அண்ட் புரோகிராமிங் அசிஸ்டெண்ட் (03), இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் (10), எலெக்ட்ரீஷியன் (10), மெக்கானிக் ரெஃப்ரிஜிரேஷன் அண்ட் ஏர் கண்டிஷனிங் (03), டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்) (02) ஆகிய தொழில் பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி
இந்த அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி முறையில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், சம்பந்தப்பட்ட டிரேடில் ஐ.டி.ஐ (ITI) தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஃபிட்டர், மெஷினிஸ்ட், மெயின்டெனன்ஸ் மெக்கானிக் (கெமிக்கல் பிளாண்ட்) / ஃபிட்டர், எலெக்ட்ரீஷியன், டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்) போன்ற பணிகளுக்கு 10ஆம் வகுப்புடன் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
வயது வரம்பு
வயது வரம்பை பொறுத்தவரை 16.03.2026 அன்று தேதிப்படி கணக்கிடப்படும். அதன்படி, பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 16 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் மற்றும் அதிகபட்சமாக 24 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது.
அரசு விதிகளின்படி, பட்டியல் சாதிகள்/பழங்குடியினருக்கு (SC/ST) 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அனுமதிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) 10 முதல் 15 ஆண்டுகள் வரையும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசின் கொள்கையின்படியும் வயதுத் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ₹9,600/- உதவித்தொகையாக வழங்கப்படும். டிரேட் தேர்வு மற்றும் இப்பதவிக்குரிய சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய முறைகளின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 16.03.2026 ஆகும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள வழிமுறைகளை கவனமாகப் படிப்பதும், தகுதியை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு, https://bhavini.nic.in/ என்ற பாவிணியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications