Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீசா சாப்பிட்டுக் கொண்டே டிவி பார்க்கும் வேலைக்கு ஆட்கள் தேவை... அசரவைக்கும் அமெரிக்க நிறுவனம்..!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பீசா சாப்பிட்டுக் கொண்டே தொலைக்காட்சி பார்க்கும் வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது அமெரிக்காவை சேர்ந்த முன்னணி நிறுவனம் ஒன்று.

கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறதா, ஆம் அப்படியோரு அதிசய அறிவிப்பை தான் வெளியிட்டுள்ளது அந்த நிறுவனம்.

இந்த வேலைக்காக இந்திய ரூபாய் மதிப்புப்படி மாதந்தோறும் ரூ.36,000 ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நிறுவனம்

அமெரிக்க நிறுவனம்

அமெரிக்காவில் இயங்கி வரும் போனஸ் பைண்டர் என்ற நிறுவனமானது நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியாகக் கூடிய நிகழ்ச்சிகளுக்கு விமர்சனங்களை எழுதி வருகிறது. மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட சூதாட்ட கிளப்புகளுக்கும் விளம்பரங்கள் செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் Binge watcher வேலைக்கு ஆட்கள் தேடி வருகிறது.

புத்துணர்ச்சி

புத்துணர்ச்சி

கடந்த ஒரு வருடமாக கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கி சோர்வடைந்த நிலையில் காணப்படும் மக்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக போனஸ் பைண்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 9-ம் தேதி தேசிய பீசா தினம் அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுவதால் அன்றைய தினம் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளது போனஸ் பைண்டர் நிறுவனம்.

நிகழ்ச்சிகளுக்கு விமர்சனம்

நிகழ்ச்சிகளுக்கு விமர்சனம்

இந்த பணிக்கு சேருவதற்கென்று எந்த ஒரு கட்டுப்பாடுகளையும் அந்த நிறுவனம் விதிக்கவில்லை. நெட் பிளிக்ஸில் வெளியாகும் நிகழ்ச்சிகளுக்கு கதைக்களம், நடிப்பு, உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு விமர்சனங்கள் மட்டும் எழுதினால் போதுமானது. நெட் பிளிக்ஸ் பார்த்துக்கொண்டு விமர்சனம் எழுதுவது போல், சாப்பிடும் பீசாக்களுக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும். சுவை, தயாரிப்பு, மூலப்பொருட்களின் தரம் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் அந்த மதிப்பெண் இருக்க வேண்டும்.

ஆச்சரிய அறிவிப்பு

ஆச்சரிய அறிவிப்பு

இப்படிப்பட்ட வேலையை யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள், அதனால் இப்போதே போனஸ் பைண்டர் நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை ஆயிரங்களில் உள்ளது. விநோதமான அறிவிப்புகளும், ஆச்சரியம் அளிக்கும் செயல்பாடுகளும் உலகின் ஏதோ ஒரு மூலையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+