பிளஸ் 2 போதும்.. மாத சம்பளம் ரூ.25,500 டூ ரூ.81,000.. பெண்களுக்கும் வாய்ப்பு.. அழைக்கும் பிஎஸ்எப்
டெல்லி: பிஎஸ்எப்பில் ஆண்கள், பெண்கள் என இருதரப்பினருக்கும் ஏற்ப ஹெட்கான்டபிள் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு முடித்து ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.25,500 முதல் அதிகப்டசமாக ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பிஎஸ்எப் (BSF) எனும் எல்லை பாதுகாப்பு படை (Border Security Force) செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஹெட்கான்ஸ்டபிள் (ரேடியோ ஆபரேட்டர்) மற்றும் ஹெட்கான்ஸ்டபிள் (ரேடியோ மெக்கானிக்) ஆகிய 2 பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி ஹெட்கான்ஸ்டபிள் (ரேடியோ ஆபரேட்டர்) பணிக்கு 217 பேரும், ஹெட்கான்ஸ்டபிள் (ரேடியோ மெக்கானிக்) பணிக்கு 30 பேர் என மொத்தம் 247 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்க ஆண்களும், பெண்களும் விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 25 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 2023 மே 12ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு.
மேலும் விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.25,500 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் மாதம் ரூ.81,100 வரை வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 22ம் தேதி முதல் மே மாதம் 12ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். https://rectt.bsf.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் உடற்தகுதி, உடல்திறன் மற்றும் மருத்து பரிசோதனை மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
*****
-
மதுரையில் வேலை.. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 127 பணியிடங்கள்! 12 ஆம் வகுப்பு தகுதி தான்! -
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications