செங்கல்பட்டு- சென்னை கடற்கரை வழித்தடத்தில் 3 நாட்கள் மின்சார ரயில்கள் ரத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே கூடுவஞ்சேரி யார்டில் அவசியமான பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 8 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூலை 13, 15ஆம் தேதிகளிலும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 8 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மதியம் 1.40 மணி முதல் மாலை 5.40 மணி வரையிலான 4 மணி நேர கால அளவில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் 8 புறநகர் ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் மக்களுக்கு மின்சார ரயில்கள் தான் முக்கியமான போக்குவரத்து வசதியாகும். ஆனால் அடிக்கடி பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கல்பட்டு முதல் தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக, காலை 10.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை 41 புறநகர் ரயில்கள் ரத்து அடியோடு செய்யப்பட்டிருந்தன.

Electric trains cancelled on the Chengalpattu Chennai Beach route for 3 days

இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ரயில்வே பராமரிப்பு பணிகள் அவசியம் தான் என்றாலும், பொதுமக்களை பாதிக்காத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். இந்த சூழலில் மதிய நேரங்களில் கூடுவஞ்சேரி யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இன்று மதியம் முதல் மாலை வரை மின்சார ரரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று 8 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூலை 13, 15ஆம் தேதிகளிலும் இதே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்களில், காலை 11.28 மணி, மதியம் 12.02 மணி, மதியம் 12.30 மணி மற்றும் மதியம் 1.45 மணிக்கு புறப்பட வேண்டிய 4 புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், மறுமார்க்கத்தில் செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து சென்னை கடற்கரை சந்திப்புக்கு வரும் ரயில்கள் மதியம் 1.35 மணி, மதியம் 2.15 மணி, மதியம் 3.00 மணி மற்றும் மாலை 4.25 மணிக்கு புறப்பட வேண்டிய 4 புறநகர் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

எனினும் ரத்து செய்யப்பட்டுள்ள புறநகர் ரயில்களுக்குப் பதிலாக, பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே சிறப்பு புறநகர் ரயில்கள் வேறு நேரங்களில் இயக்கப்பட உள்ளன.

இந்த சிறப்பு ரயில்களின் நேர அட்டவணை.. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு காலை 11.28 மணி, மதியம் 12.02 மணி, மதியம் 12.30 மணி மற்றும் மதியம் 1.45 மணிக்கு சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும். மறுபுறம், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு மதியம் 2.30 மணி, மதியம் 3.15 மணி, மாலை 4.00 மணி மற்றும் மாலை 5.24 மணிக்கு சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் " இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+