ஒரே நைட்டில் 80 இடங்கள் காலி.. வெறித்தனமாக தாக்குதல் நடத்திய அமெரிக்கா! கோபத்தின் உச்சியில் ஈரான்!
தெஹ்ரான்: நேற்றிரவு மட்டும் ஈரானின் 80 நிலைகளை குறிவைத்து அமெரிக்கா வெறித்தனமாக தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஈரானின் ராணுவ நிலைகள் மற்றும் எண்ணெய் முனையங்கள் என 80க்கும் அதிகமாக இடங்கள் மீது அமெரிக்கா அட்டாக் நடத்தியிருக்கிறது.
சமீபத்தில் சவுதி அரேபியா மற்றும் கத்தார் நாடுகளுக்கு சொந்தமான எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதை ஈரான்தான் செய்தது என்று கூறி தற்போது அமெரிக்கா ஆட்டத்தை தொடங்கியிருக்கிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும், தாக்குதலை நடத்தியிருக்கிறது. குறிப்பாக பஹ்ரைன், கத்தாரில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இதனால் இந்த பகுதிகளில் சைரன்கள் ஒலிக்க தொடங்கியிருக்கின்றன. அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்திருக்கும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், "மிரட்டல் மற்றும் அடக்குமுறையின் காலம் முடிந்துவிட்டது. இனி அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications