டீ, காபி விலை எகிற போகுது! பால் விலை உயர்வு.. தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது புது ரேட்!
சென்னை: தமிழகம் முழுவதும் தனியார் பால் விற்பனை நிறுவனமான ஆரோக்யா, விலையை உயர்த்தியுள்ளது. இதனால் மற்ற நிறுவனங்களும் விலையை ஏற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இனி டீ, காபி ரேட்டும் அதிகரிக்கும்.
பால் கொள்முதல் விலை மற்றும், அதை விநியோக்க ஆகும் செலவு காரணமாக இந்த விலையுயர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வும் பால் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

சமன்படுத்தப்பட்ட பால் 500 மி.லி - ரூ.29லிருந்து, ரூ.31ஆகவும்
நிலப்படுத்தப்பட்ட பால் 500 மி.லி - ரூ.35லிருந்து, ரூ.37ஆகவும்
கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் 500 மி.லி - ரூ.39லிருந்து, ரூ.41ஆகவும்
சமன்படுத்தப்பட்ட பால் 1 லி - ரூ.66லிருந்து, ரூ.69ஆகவும்
கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் 1 லி - ரூ.73லிருந்து, ரூ.76ஆகவும்
என புதிய விலையில் இன்று முதல் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இதனை சரி செய்ய வேண்டும் எனில், ஆவின் பால் விற்பனையை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்த வேண்டும். இன்னும் கிராமங்களில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications