கனரா வங்கியில் அதிகாரி ஆகணுமா? 60 பணியிடங்கள்.. லட்சங்களில் சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: கனரா வங்கியில் காலியாக உள்ள 64 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிஇ / பிடெக், எம்.எஸ்.சி, எம்.சி.ஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு லட்சங்களில் சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. இந்த பணியிடங்கள் குறித்த விரிவான விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இருப்பது கனரா வங்கி.கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. .... ஊழியர்களுடன் செயல்பட்டு வரும் இந்த வங்கியில் சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
* ஆப் டெவலப்பர்கள் - 07 பதவிகள்
* கிளவுட் அட்மினிஸ்ட்ரேட்டர் - 02
* கிளவுட் செக்யூரிட்டி Analyst - 02
* அனலிஸ்ட் ஆய்வாளர் - 01
* டேடா பேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் - 09
* டேடா இன்ஜினியர் - 02
* டேடா மைனிங் நிபுணர் - 02
* தரவு சயிண்டிஸ்ட் - 02
* SOC (பாதுகாப்பு செயல்பாட்டு மையம்) ஆய்வாளர் - 02
* சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் - 08 என மொத்தம் 22 வகையான பணியிடங்களில் மொத்தம் 60 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: கனரா வங்கி வெளியிட்டுள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் துறை சார்ந்த பிரிவில் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். பி இ/ பிடெக், எம்.எஸ்.சி, எம்.சி.ஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி அனுபவமும் கோரப்பட்டுள்ளது. கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உள்ளன.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளத்தை பொறுத்தவரை பணியிடத்திற்கு தகுந்தபடி மாறுபடும். ஆண்டுக்கு ரூ.18 லட்சம் முதல் 27 லட்சம் வரை சம்பளமாக கிடைக்கும். ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
தேர்வு முறை: ஆன்லைன் டெஸ்ட் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமும் போதுமான கல்வி தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொண்ட பின்னர் https://canarabank.com என்ற வெப்சைட் மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க வரும் 24.01.2025. கடைசி நாள் ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://canarabank.com/UploadedFiles/Pdf/RP%201-2024%20-%20Specialist%20Officers%20-web%20advt-%2003012024.pdf
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications