"70 வயது மூதாட்டியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்தது திமுக அரசு” - சிடிஆர் நிர்மல் குமார் அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அன்றைய முதலமைச்சருக்கு எதிராக ஒரு வார்த்தை பேசியதற்காக 70 வயது மூதாட்டியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்தது தான் திமுக அரசு. விளாத்திகுளம் எம்எல்ஏ, முதல் அமைச்சரை அச்சுறுத்தும் வகையில் பேசினால், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார்கள்" என சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "விளாத்திகுளம் எம்எல்ஏ, முதல்வரை அச்சுறுத்தும் வகையில் பேசினால், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார்கள். திமுக ஆட்சியில் ட்வீட் போட்டதற்காக எத்தனை பேர் மீது குண்டாஸ் போட்டனர். முதல்வரை எதிர்த்து ட்வீட் போட்டதற்காக குண்டாஸ் போடப்பட்டது.

CTR Nirmal kumar

முதல்வருக்கு எதிராக ஒரு வார்த்தை பேசியதற்காக 70 வயது மூதாட்டியை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைத்தது தான் திமுக அரசு. மூன்றாம் நபராக இருந்தால் பரவாயில்லை. எம்எல்ஏ ஒருவர் மேடையில் அவதூறாக மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினால் அது சட்டம் ஒழுங்கு பிரச்சனை. சாதாரண பிரச்னை இல்லை.

மூன்றாம் தரப்பு நபர் சாலையில் பேசினால் விட்டுச் செல்லலாம். எம்எல்ஏ மைக் பிடித்து அனைவரின் முன்னால் பேசினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை. பொதுமக்கள், தவெகவினர் கேட்டால் பெரிய கைகலப்பு தான் உருவாகும். எம்எல்ஏ என்ன பேச வேண்டும் என்று ஒன்று உள்ளது. சட்டப்படி தான் கைது நடைபெற்றுள்ளது. இதில் எந்த விதிமீறலும் இல்லை. கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினால் வழக்குகள் வரத்தான் செய்யும்.

கடந்த ஆட்சியில் யாரும், முதல்வருக்கு மிரட்டல் விடுத்துப் பேசவில்லை. மாப்பிள்ளை, மகன், முதல்வரை சொன்னால் குண்டாஸ் போட்டனர். டிராமா செய்கின்றனர். கரூர்காரர் கட்டிலுக்கு அடியில் அழுகிறார். காரில் ஏறி மயக்கம் வருது என தற்போது எம்எல்ஏ அழுகிறார். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டாமா? புகார் வந்துள்ளது. அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். டிராமா போட்டால் என்ன செய்ய முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "அதிமுக கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர், நிர்வாகிகள் விலகி வந்தால் குதிரை பேரம் என்றால் எப்படி ? எங்கள் எம்எல்ஏவிடம் பேரம் பேசினார்கள். பணம் பிடிபட்டுள்ளது. பேசியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேசிய ஆடியோ உள்ளது. நாங்கள் யாரிடமாவது பேசி உள்ளோமா? அவர்களாக விரும்பி, வந்துள்ளனர். எங்கள் எம்எல்ஏவிடம் பேசியது தான் குதிரை பேரம்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+