வெளிநாட்டில் ஆன்சைட் வேலை.. லண்டன் நகரில் கள எதார்த்தம் என்ன? ஐடி பணியாளர்கள் சொல்வது என்ன?
சென்னை: வெளிநாட்டு வாழ்க்கை பற்றி இங்கு ஒரு அமைப்பு ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இவங்க எல்லாம் அங்க போய் உட்கார்ந்திட்டு யாரும் வராதிங்கன்னு சொல்லிட்டு இருக்காங்க... அதை முற்றிலுமாக இந்த போஸ்ட் தகர்த்து எரிந்து இருக்கிறது. சரியான பிளான் மற்றும் ஒழுக்கத்துடன் இருந்தால் நிச்சயம் சம்பாதிக்கலாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்..
அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்வீடன், நார்வே, கனடா உள்பட பல்வேறு மேற்கத்திய நாடுகளில் சாப்ட்வேர் என்ஜினியர்களாக ஆன்சைட்டில் வேலைக்கு சென்று செட்டில் ஆனவர்களில் சிலர், ஒரே குரலில் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள். என்னவென்றால், மேற்கத்திய நாடுகளுக்கு ஆன்சைட்டுக்கு வராதீங்க.. வந்தால் சென்னையில் சேமிக்கும் பணம் கூட இங்கே கிடைக்காது. வரவுக்கும் செலவுக்கும் சிரமமாக இருக்கும்..

வெளிநாடுகளில் வாழ்க்கை முன்பு போல் இல்லை.. கடினமாக உள்ளதாக பிரச்சாரம் செய்கிறார்கள்.. உண்மையில் அப்படித்தான் இருக்கிறதா.. ரியாலிட்டி என்ன.. வெளிநாட்டில் உள்ள ஒருவர் வெளியிட்ட பதிவினை கார்த்திக் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை இப்போது அப்படியே பார்ப்போம்.
"வெளிநாட்டு வாழ்க்கை பற்றி இங்கு ஒரு அமைப்பு ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இவங்க எல்லாம் அங்க போய் உட்கார்ந்திட்டு யாரும் வராதிங்கன்னு சொல்லிட்டு இருக்காங்க... அதை முற்றிலுமாக இந்த போஸ்ட் தகர்த்து எறிந்து இருக்கிறது. சரியான பிளான் மற்றும் ஒழுக்கத்துடன் இருந்தால் நிச்சயம் சம்பாதிக்கலாம். இந்த பதிவினை பாருங்கள்.
இப்பத்தான் ஆன்சைட்டில் லண்டன் வந்தேன். 6 மாதம் ஆகிறது.. ஆன்சைட் வர்றதுக்கு முன்னாடி இங்க ஆன்சைட்ல இருக்குறங்ககிட்ட எல்லாம் ஆன்சைட் வரலாமா.. வந்தால் சேமிக்க முடியுமா என்று கேட்டேன்.. அவர்கள் வராதே, வந்தால் பயங்கர செலவு அப்படி இப்படின்னு சொன்னாங்க.. ஆனால் எனக்கு என்னமோ ஆன்சைட் போனால் நிறைய சம்பாதிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் இங்கே வேறு ஒரு மாதிரி வாழ்க்கை இருக்கு..
என்னுடைய மாதம் சம்பளம் 3.2லட்சம் கிட்ட வருது. இங்கே செலவு அதிகம் தான்.. ஆனால் சமாளிக்கக் கூடியதாகவே இருக்கிறது. இங்கே என்னால் மாதம் 2லட்சம் சேமிக்க முடிகிறது. இங்கே இருக்கிறவர்கள் மாதிரி நான் நாடு நாடாக நான் சுத்த மாட்டேன்,. சனி மற்றும் ஞாயிறு மட்டும் வெளியில் போவேன்.. என் ஆபிஸ் நான் இருக்கும் இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் தான். நான் தினமும் நடந்து தான் ஆபிஸ் போகிறேன்.. இப்பத்தான் ஒரு சைக்கிளை வாடகைக்கு வாங்கி அதுல நான் முயற்சி பண்ணலாம் என்று இருக்கிறேன். முடிந்தவரை நான் வெளியில் சாப்பிட மாட்டேன்.. வீட்டிலேயே என்ன செய்ய முடியுமோ, அதான் சாப்பிடுவேன்.. முக்கியமான விஷயம்.. நான் சரக்கு அடிக்குறதே இல்லை.. எனக்கு என்னமோ சரக்கு விலை இங்க அதிகமாக தோன்றுகிறது. சரக்கு விலையும் ஹீட்டர் விலையும் ஒன்று தான் என தோன்றுகிறது.

இப்படியெல்லாம் இருப்பதால் மாதம் என்னால் ஒரு லட்சம் அதிகமாக சேமிக்க முடிகிறது. இங்க எல்லாரும் என்னை பூமர் மாதிரி பார்க்குறாங்க.. ஆனால் நான் ஆன் சைட் வந்த காரணமே நிறைய சம்பாதிச்சிட்டு போயிடனும் என்பது தான்.. இன்னும் 10 மாதம் ஒப்பந்தம் இருக்கு.. எப்படியும் ஒரு 30 லட்சம் சேமித்துவிட்டு ஊருக்கு போக வேண்டியது தான்.. குடும்பத்தோடு சுற்றுலா பிளான் பண்ணி இருக்கேன்.. இங்கே நான் தனியாக சுற்றுலா போனாலே ஒரு லட்சம் ஆகுது. இந்த காசுக்கு என் குடும்பத்துடன் நான் மனநிறைவாக கூட இருக்க முடியும்.. மக்களே இனி எவனாச்சும் ஆன்சைட் காரணம் நீலி கண்ணீர் வடிச்சா போடோ வெண்ணேனு சொல்லுங்க... எல்லாம் பிராடு பசங்க" இவ்வாறு கூறியுள்ளார். இந்த பதிவினை கார்த்தின் என்பவர் தனது எக்ஸ் தளத்தில ஷேர் செய்துள்ளார். இது அதிக அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications