ஐடி வேலைவாய்ப்பு.. சூப்பர் சம்பளத்தில் பெண்களுக்கு ஜாக்பாட்! அழைக்கும் Capgemini.. ஆக.,15 கடைசி நாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான கேப்ஜெமினி (Capgemini) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெண்களுக்காக பிரத்யேகமாக வெளியாகி உள்ள இந்த பணிக்கு ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த பணிக்கான மாதசம்பளம், தகுதி உள்ளிட்ட முக்கிய விபரங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

Capgemini (கேப்ஜெமினி).. நம் நாட்டில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று இதுவாகும். இந்த நிறுவனம் பிரான்ஸை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. நம் நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

it jobs jobs job

இந்நிலையில் தான் தற்போது கேப்ஜெமினி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த வேலைவாய்ப்பு என்பது பெண்களுக்கான பிரத்யேகமாக அறிவிப்பாக அமைந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின் கேப்ஜெமினி அலுவலகத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த பணி என்பது பெண்களுக்கானது. இதனால் பெண்கள் மட்டும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எம்சிஏ, எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம்செய்யலாம்.

விண்ணப்பம் செய்வோருக்கு கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் நன்றாக இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். ப்ரோகிராமிங் ஸ்கில்ஸ், ஸ்ட்ராங் ஆர்க்கடிடெக்ச்சர் மற்றும் டிசைன் பேக்கிரவுண்ட் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வோருக்கு DigiLocker அக்கவுண்ட் இருக்க வேண்டும். மேலும் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் கட்டாயம் இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ. 4 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் மாதம் ரூ.33,333 மாதசம்பளமாக கிடைக்கும். மேலும் ‛ஒன்டைம் இன்செட்டிவ்' என்ற வகையில் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு தேர்வாகும் நபர்கள் மும்பையில் நியமனம் செய்யப்படுவார்கள். ஆனாலும் தேவையை பொறுத்து பிற இடங்களில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Capgemini இணையதளம் சென்று ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

பணி குறித்த அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+