சென்னையில் ஐடி வேலை.. Capgemini நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனடியாக விண்ணப்பிக்கலாம்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் கேப்ஜெமினியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக கேப்ஜெமினி விளங்கி வருகிறது. உலகின் பல்வேறு நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையிலும் கேப்ஜெமினி ஐடி நிறுவனம் இயங்கி வருகிறது. தற்போது சென்னை அலுவலகத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

அதன்படி Mainframe Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு கட்டாயமாக சில ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். அதன்படி மெயின் பிரேம் - COBOL, CISCS, DB2, JCL, VSAM உள்ளிட்டவை ஸ்கில்ஸாக இருக்க வேண்டும். மேலும் பைல் மேனேஜர், ஐபிஎம், ஜேசிஎல் யூடிலிட்டிஸ் தெரிந்திருக்க வேண்டும். Agile, rally பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் செட்யூலிங் டூல்ஸ்களான TWS/CA7 உள்ளிட்டவை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். சர்வீஸ் நவ்/ ஏனி டிக்கெட்டிங் சிஸ்டம் டூல் பற்றிய அறிவு இருக்க வேண்டும். அதேபோல் இன்சூரன்ஸ் டொமைன் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். டைரக்ட் கிளைன்ட் இன்டரக்சன், இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ், புராபஷனல் அப்ரோஜ் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக விண்ணப்பம் செய்வோருக்கு குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 12 ஆண்டு வரை சம்பந்தப்பட்ட பிரிவில் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் புதிய டெக்னாலஜியை விரைவாக கற்கும் திறன் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கான விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள கேப்ஜெமினி அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications